டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* சம உரிமைக்கான இயக்கமாம்: ஹிந்துக்களுக்கு சம உரிமை கோருகிறார், மேனாள் சி.பி.அய்.இயக்குநர் நாகேஷ்வர ராவ். மேனாள் தலைமை செயலாளர் எல்.வி.சுப்ரமணியன் பங்கேற்பு.
* பீகார் என்.டி.ஏ. கூட்டணித் தொகுதி பங்கீட்டில் சிக்கல்; ஆர்.ஜே.டி. கட்சியில் நிதிஷ் குமாரின்
ஜே.டி.யு. கட்சியின் மேனாள் சட்டமன்ற, நாடாளு மன்ற உறுப்பினர்கள் தாவல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* எச்.1 பி. விசா கட்டணம் அதிகமானதால், கடந்த ஆண்டை விட அமெரிக்காவிற்கு இந்திய மாணவர் வருகையில் 44% குறைவு, இது கோவிட்-க்குப் பிறகு தற்போது நடைபெற்றுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கருநாடகாவில் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) எதிர்க்க அரசியல் தலைவர்கள், சிவில் சமூகம் முடிவு: வாக்காளர் பட்டியலில் இருந்து பெருமளவில் பெயர்கள் நீக்கப்படுவது பற்றி அச்சமடைந்த அரசியல் தலைவர்களும், சிவில் சமூக அமைப்புகளும் ‘எனது வாக்கு, எனது உரிமை’ என்ற மாநிலம் தழுவிய பிரச்சாரம் நடத்த முடிவு; சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட கோரிக்கை.
தி இந்து:
* ஆப்கானிஸ்தானின் தலிபான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தகி செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை விதித்ததால் சர்ச்சை: காங்., எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
டைம்ஸ் ஆப் இந்தியா:
* சீனப் பொருட்களுக்கு கூடுதலாக 100% வரி: சீனாவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும் நவம்பர் 1ஆம் தேதி முதல் கூடுதலாக 100% வரி விதிக்கப்படும். சீனா வேறு ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், இந்த உயர்வு உடனடியாக அமலுக்கு வரும்.இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
– குடந்தை கருணா