முன்னர் காலஞ்சென்ற அயோத்திதாச பண்டிதரவர் களால் “தமிழன்” என்னும் பெயர் கொண்ட பத்திரிகை நடத்தப் பெற்று அவர் காலத்திற்குப் பின்னர் அப்பத்திரிகை நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. பிறகு சில காலம் மற்றொருவரால் நடத்தப் பெற்றது. அதன் பிறகும் ஆதரிப்பாரற்று நின்று போயிற்று. மீண்டும் இப்பொழுது சாம்பியன் ரீப்ஸ், கோலார் தங்கவயல் சித்தார்த்த புத்தகசாலை வைத்திருக்கும் பி.எம்.இராஜரத்தினம் அவர்களால் ஜூலை மாத முதல் வெளியிடப்படுமென தெரிவிக்கப்படுகிறோம். இராஜரத்தினம் அவர்களின் நிர்வாகத் திறமையால் நன்கு நடைபெறு மென நம்புகிறோம்.
– குடிஅரசு – செய்தி 04.07.1926