உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் மீதான தாக்குதலையும், நீதித் துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் சதியையும் கண்டித்து
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் மீதான தாக்குதலையும், நீதித் துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் சதியையும் கண்டித்து, அக்டோபர் 14 அன்று சென்னையிலும், அக்டோபர் 15 அன்று, விருத்தாசலம், அரியலூர் ஆகிய நகரங்களிலும் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் சிறப்புக் கூட்டங்கள் நடைபெறும்.
Contents
அக்டோபர் 16 அன்று காலை தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஆர்ப்பாட்டம் நடைபெறும் மாநகரங்கள்:
- கோயம்புத்தூர், 2. திருச்சிராப்பள்ளி, 3. மதுரை,
4. சேலம், 5. திருப்பூர், 6. ஈரோடு, 7. திருநெல்வேலி,
8. ஆவடி, 9. வேலூர், 10. தூத்துக்குடி, 11. ஒசூர், 12. காஞ்சிபுரம்,
13. கரூர், 14. புதுக்கோட்டை, 15. காரைக்குடி,
16. கும்பகோணம், 17. திண்டுக்கல், 18. நாமக்கல்,
19. கடலூர், 20. சிவகாசி, 21. திருவண்ணாமலை, 22. தஞ்சை, 23. தருமபுரி, 24. நாகர்கோவில், 25. புதுச்சேரி
தோழர்களின் முக்கியக் கவனத்திற்கு:
- மேலே அறிவிக்கப்பட்டுள்ளபடி அனைத்து நகரங்களிலும் அக்டோபர் 16 அன்று காவல்துறை அனுமதியுடன், மக்கள் பார்வையில்படும்படியான இடத்தில் ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்ய வேண்டும்.
- ஒவ்வொரு நகரத்திலும் ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை ஏற்போர், பங்கேற்றுச் சிறப்புரையாற்றவுள்ள சொற்பொழிவாளர்களின் பட்டியல் நாளை வெளிவரும்.
- சொற்பொழிவாளர்களை உடன் தொடர்புகொள்ள வேண்டும்.
- ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ள நகரங்களைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் கழகப் பொறுப்பாளர்கள், அனைத்து அணிகளைச் சேர்ந்த தோழர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும்.
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்