உ |
லகில் வசித்து வருகின்ற மக்களின் தொகை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அந்த மக்கள் பயன்படுத்துகின்ற வாகனங்கள் பலவும் பலவாறு பெருகி வருகின்றன. அவற்றின் தடையற்ற போக்குவரத்திற்குத் பாலங்கள் இன்றியமையாதனவாகும்.
அந்த வகையில் உலகில் உள்ள பாலங்களில் 565 மீட்டர் உயரத்தில் சீனாவின் பெய்பான் ஜியாங் என்ற இடத்தில் கட்டப்பட்ட பாலம்தான் மிக உயரமான பாலமாக இருந்து வந்தது.
தற்போது அந்த சாதனையானது முறியடிக்கப் பட்டுள்ளது. அதே சீனாவின் குய்சோ மாகா ணத்தில் பெய்பான் ஆற்றுக்கு மேலே
கட்டப்பட்டு – ஹுவாஜியாங்க் கிராண்ட் எனப் பெயரிடப்பட்டு அண்மையில் (29.9.2025) திறந்து வைக்கப்பட்டுள்ள பாலம்தான் இன்றைய உலகின் மிக உயரமான பாலமாகும். தரைமட்டத்திலிருந்து இதன் உயரம் 625 மீட்டர் ஆகும்.
இரண்டு மலைகளை இணைக்கின்ற இந்தப் பாலம் உலகின் பொறியியல் அற்புதம் என்றுதான் சொல்லப்பட வேண்டும்.மிகவும் அழகுடன் உணவகங்கள், பூங்கா, நடைபாதை வசதிகளோடு எழிலாகக் காட்சித் தருகின்ற இப்பாலத்தை பொதுமக்கள் வந்து பார்ப்பதற்கு வசதியாக 287 மீட்டர் உயரத்தில் லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. 2 மணி நேர பயணத்தை 2 நிமிடங்களாகக் குறைத்துள்ளதும் இந்தப் பாலத்துக்கொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.