சென்னை,அக்.9- வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை கூட்டரங்கில் நேற்று முன்தினம் (7.10.2025) வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு
அமைச்சர்கள் கே.என்.நேரு. மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினர். இதில், மருத்துவத்துறை நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அப்போது புகை மருந்து தெளிப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய பதாகை, தமிழ்நாடு நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் மேற்பார்வை எதிர்ப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது.
பின்னர், அமைச்சர் மா.சுப்பி ரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாவட்ட அளவில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்க ப்பட்டுள்ளன. இதேபோல, மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. ஏதாவது ஒரு கிராமத்தில் 3க்கும் மேற்பட்ட காய்ச்சல் பாதிப்பு, வயிற்று போக்கு போன்ற பாதிப்புகள் இருந்தால் உடனடியாக மருத்துவ முகாம்களை நடத்த வேண்டுமென முதலமைச்சர் அறிவுறுத் தியுள்ளார். அதன்படி, ஆயிரக்கணக்கான மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
10 ஆயிரம் முகாம்கள்
பருவமழையை முன்னிட்டு கடந்த ஆண்டு 18.435 முகாம்கள் நடத்தப்பட்டன. இதன்மூலம். 21 லட்சத்து ஆயிரத்து 732 பேர் பயனடைந்தனர். அதன்படி, இந்த ஆண்டும் பருவமழையை முன்னிட்டு 10 ஆயிரம் முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். மழைக்காலங்களில் வீடுகளைச் சுற்றி தேங்கியுள்ள மழைநீரினால் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றது. ஏ.டி.எஸ் கொசு பரவலை தடுக்க வீடு வீடாகச் சென்று மழைநீர் தேங்கியுள்ள பகுதி கள் கண்டறியப்பட்டு தூய்மை ப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தற்போது வரை 15,790 டெங்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில், 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இறப்பு இணை பாதிப்புகள் காரணமாக ஏற்பட்டிருக்கிறது. டெங்கு பாதிப்பு தற்போது கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வில், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் கார்த்திகேயன், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் லால் வேனா. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.