டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தமிழ்நாட்டில் உள்ள ஊர்கள், தெருக்கள், மற்றும் பொது இடங்களில் உள்ள ஜாதிப் பெயர்களை உடனடியாக நீக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சமூக சமத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டும் நோக்கில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
* காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
*அமித்ஷாவை எப்போதும் நம்ப வேண்டாம் என்று பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொள்கிறேன். ஒருநாள், அவர் உங்கள் மிகப்பெரிய மிர் ஜாபராக (பிளாசி போரில் நவாப் சிராஜ் உத் தவுலாவை காட்டிக் கொடுத்து பின்னர் ஆங்கிலேயர்களின் உதவியுடன் மன்னரான 18ஆம் நூற்றாண்டின் வங்காள ராணுவ ஜெனரல்) மாறலாம். விழிப்புடன் இருங்கள், மம்தா எச்சரிக்கை.
* தெலங்கானா அரசு பிறப்பித்த பிற்படுத்தப்பட் டோருக்கு 42 சதவீத மசோதாவுக்கு தடை விதிக்க அம்மாநில உயர் நீதிமன்றம் மறுப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒடிசா கட்டாக்கில் வன்முறை; பாஜக கடந்த ஆண்டு ஒடிசாவில் தனது முதல் அரசாங்கத்தை உருவாக்கிய பின்னர் இதுபோன்ற சமீபத்திய சம்பவமாகும். மூத்த பாஜக தலைவர் என்ன நடந்தது என்பது “ஒரு எச்சரிக்கை மணி” என எச்சரிக்கை.
* பீகார் வாக்காளர் சிறப்பு திருத்தம்: இறுதி பட்டியலில் 5 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.
* தொகுதி பங்கீட்டில் கடும் இழுபறி பீகாரில் என்டிஏ கூட்டணியில் குழப்பம்: 15 சீட் கேட்கும் மேனாள் முதலமைச்சர் மஞ்சி; சிராக் பஸ்வான் 40 இடங்களுக்கு கடுமையாக பேரம் பேசுகிறார்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாட்னா டைரி: சட்டசபை தேர்தல்களில் நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி படுதோல்வி அடையும், லாலு கணிப்பு.
தி இந்து:
* பீகார் சட்டமன்றம் 2020 முதல் 2025 வரை அய்ந்தாண்டுகளில் 146 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. ஆண்டுக்கு சராசரியாக 29 நாட்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று மணி நேரம் செலவிட்டுள்ளது என பி.ஆர்.எஸ் சட்டமன்ற ஆராய்ச்சியின் பகுப்பாய்வு அறிக்கை.
* கல்வி, வேலைகள் மற்றும் நில உரிமை: பீகாரில் உள்ள தாழ்த்தபப்ட்டவர்கள் பின்னடைந்துள்ளதாக NACDOR அறிக்கை வெளியீடு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* போபால்: இருமல் சிரப் உட்கொண்ட பிறகு மத்திய பிரதேச யில் குழந்தைகளின் இறப்புகள் செப்டம்பர் 3 ஆம் தேதியே பதிவாகியுள்ளன, ஆனால் செப்டம்பர் 16 ஆம் தேதி தான் நிர்வாகம் நிலைமையின் தீவிரத்தை அங்கீகரித்து, சிண்ட்வாரா மாவட்டத்தின் பராசியா தடுப்பில் ஒரு கணக்கெடுப்பைத் தொடங்கியது. ஆனால் தமிழ்நாட்டில் மறு நாளே தடுக்கப்பட்டுள்ளது.
– குடந்தை கருணா