டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பீகாரில் 3.66 லட்சம் வாக்காளர்களை நீக்கியது ஏன்? உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி. நாளைக்குள் விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்.
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
*தலைமை நீதிபதி மீது காலணி வீச்சு; கடவுள் தான் செய்ய வைத்தார்: டில்லி வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் திமிர்ப் பேட்டி.
* பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு மசோதா: அய்தராபாத் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*ஆந்திராவில் மருத்துவக் கல்லூரிகளை தனியார்மயமாக்கும் முடிவுக்கு ஒய்.எஸ்.ஆர்.பி. கட்சி கடும் எதிர்ப்பு. கையெழுத்துப் பிரச்சாரத்தை தொடங்க முடிவு.
தி டெலிகிராப்:
* மாநில தகுதி லடாக்கின் இலக்காக உள்ளது, ஆனால் சட்டமன்றம் மற்றும் ஆறாவது அட்டவணை தகுதியுடன் கூடிய யூனியன் பிரதேசம் தற்காலிக தீர்வை வழங்கக்கூடும் என்கிறார் லடாக் தலைவர் செவாங் டோர்ஜய்
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பீகாரில் இந்தியா கூட்டணியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் மேனாள் ஒன்றிய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி சேர வாய்ப்பு. ஆளும் என்.டி.ஏ. கூட்டணியும் தொகுதி பங்கீட்டில் மும்முரம்.
– குடந்தை கருணா