சென்னை, அக்.8- மூளை மற்றும் ரத்தக்குழாய் அடைப்புகளை துல்லியமாக குணப்படுத்த இந்தியாவிலேயே முதல்முறையாக நரம்பியல்‘ஹைப்ரிட்’ அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
முதல் ‘ஹைப்ரிட்’ அறுவை சிகிச்சை
மூளை மற்றும் நரம்பியல் பிரச்சினைகளுக்கு ஏராளமான மக்கள் தினந்தோறும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின் றனர். இது குறித்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையின் டீன் காவியா கூறுகையில்,
“இந்தியாவிலேயே முதல்முறையாக மூளை மற்றும் ரத்தக் குழாய் பிரச்சினைகளை சரி செய்யும் ‘ஹைப்ரிட்’ அறுவை சிகிச்சை கடந்த மாதம் தொடங்கி வெற்றிகரமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமவனை செய்யப்பட்டுவருகிறது. மூலம் நரம்பியல் அறுவை சிகிச்சையின் முன்னோடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை திகழ்கிறது” என்றார்.
செயற்கை மண்டை ஓடு
நரம்பியல் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் கோடீஸ்வரன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
“கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ‘ஹைப்ரிட்’ அறுவை சிகிச்சை மூலம் துல்லியமான மற்றும் விரைவான சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த மாதம் 30-க்கும் மேற்பட்டோருக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது இதுதவிர நரம்பியல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முலம் அறுவை சிகிச்சை செய்து முகத்தோற்றம் சரிசெய்தல், விபத்துகளில் பாதிக்கப்பட்டு சேதமடைந்த மண்டை ஓட்டுக்கு மாற்றாக செயற்கை மண்டை ஓடு பொருத்தி பல பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான சிகிச்சை அளித்து வருகிறோம்.
கடந்த 30 மாதங்களில் கிட்டத்தட்ட 600 பேருக்கு வெற்றிகரமாக பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த சிகிச்சைகள் அனைத்தும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக மக்களுக்கு இலவசமாக அளிக்கப்படுவதால் சாதாரண மக்கள் பெரிதும் பயனடைகின்றனர்”
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு புறக்கணிப்பு
ரூ.24,634 கோடி மதிப்பிலான
4 மிகப் பெரிய ரயில் திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
4 மிகப் பெரிய ரயில் திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
புதுடில்லி, அக்.8 ரூ.24,634 கோடி மதிப்பிலான 4 மிகப்பெரிய ரயில் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கான நான்கு ரயில்வே திட்டங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
மகாராஷ்டிராவின் வார்தா – பூஷாவல் இடையேயான 314 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3-ஆவது மற்றும் 4-ஆவது ரயில் பாதைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மகாராஷ்டிராவின் கோண்டியா மற்றும் சத்தீஸ்கரின் டோன்கர்கர் இடையேயான 84 கிலோ மீட்டர் தொலைவுக்கு 4-ஆவது பாதை அமைப்பதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், குஜராத்தின் வதோதரா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் ரட்ளம் இடையேயான 259 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3-ஆவது மற்றும் 4-ஆவது பாதை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதோடு, மத்தியப் பிரதேசத்தின் இடார்சி – போபால் – பினா இடையேயான 237 கிலோ மீட்டர் தொலைவுக்கு 4-ஆவது பாதை அமைக்கவும் ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது.