சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பொன்னாடை அணிவித்து, ‘வீரவாள்’ நினைவுப் பரிசாக வழங்கினார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கினார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் அ. செம்பியன்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு வரலாற்றினை எடுத்துரைக்கும் ஒளிப்படக் கண்காட்சியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா, சட்டமன்ற உறுப்பினர் மரு. நா. எழிலன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.
மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்முகத்துடன் வரவேற்று புத்தகத்தை வழங்கினார். தமிழ் மொழியில் கட்டளைகள் பிறப்பித்து நடைபெற்ற பெரியார் சமுகக் காப்பு அணியின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டார். உடன்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, ஆ. இராசா, கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு கருத்தரங்கத்தில் பங்கேற்ற தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்களுக்குத் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலரினை வழங்கினார். அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கருத்தரங்கத்தில் தமிழர் தலைவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.ெஹச். ஜவாஹிருல்லா, மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ. வந்தியத்தேவன் ஆகியோர் பொன்னாடை அணிவித்தனர். உடன் : கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார்.
மாநாட்டு மேடையில் பெரியார் கல்வி நிறுவனங்களின் சார்பில் மாணவர்களின் பகுத்தறிவுக் கலை நிகழ்ச்சிகள், நாடகம் நடைபெற்றது.