டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* நடிகர் விஜய்க்கு தலைமை பண்பு இல்லை. என்ன மாதிரியான கட்சி இது? விஜய் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யாதது ஏன்? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) தலைமையகம் மற்றும் அதன் நிறுவனங்களில் தனிப்பட்ட உதவியாளர் பதவிக்கு 114 காலியிடங் களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு குறிப்பிடப்படவில்லை; இடஒதுக் கீட்டிற்கான அரசியலமைப்புச் சட்ட விதிகள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடிதம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* இந்தியா முழுவதும், 25 மாநிலங்களில், சிக்கிம் மற்றும் மேகாலயா உயர் நீதிமன்றங்கள் மட்டுமே முழுமையான நீதிபதிகளுடன் பணியாற்றுகின்றன; அலகாபாத் 76 காலியிடங்களுடன் முதலிடத்தில் உள்ளது. செப்டம்பர் 1, 2025 நிலவரப்படி நீதித்துறை தரவுகளின்படி, இந்தியா முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்கள் மொத்தம் அனுமதிக்கப்பட்ட 1,122 நீதிபதிகளில் 330 நீதிபதி பதவிகள் நிரப்பப்படாமல் போராடி வருகின்றன,
* “மணிப்பூரில் நடந்த வன்முறை மற்றும் கும்பமேளா சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓர் ஆணையம் அமைக்க மறுத்த அதே பாஜக அரசு, தேசிய அளவில் சீற்றம் ஏற்பட்ட போதிலும், கரூரில் விரைவாக நடவடிக்கை எடுத்தது. இங்கு ஏன் இந்த அவசரம்? ஏனென்றால் தேர்தல் நெருங்கி வருகிறது,” என்று ராமநாதபுரம் அருகே பேராவூரில் நடைபெற்ற அரசு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். பாஜக எந்த முகமூடி அணிந்து வந்தாலும் தமிழ்நாடு ‘அவுட் ஆஃப் கன்ட்ரோல்’தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி தெரிவித்தார்.
தி டெலிகிராப்:
* இந்திய சட்ட அமைப்புச் சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படுகிறது என்றும், “புல்டோசரால் அல்ல” என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பேச்சு.
– குடந்தை கருணா