ஆண்டிபட்டி, அக்.3- ஆண்டிபட்டி நகரக் கழகம் சார்பாக தந்தை பெரியாரின் 147ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா வெள்ளி விழாவை நோக்கி 24ஆம் ஆண்டாக 28.9.2025 அன்று மதுரை அரசு இராசாசி மருத்துவமனை இரத்த வங்கிக்கு நன் கொடையாக வழங்க குருதிக்கொடை முகாம் இரத்த சேமிப்பு நகர்வுப் பேருந்தில் (குளு குளு வசதியுடன்) நடைபெற்றது.
தேனி மாவட்டத் துணைத் தலைவர் ஆண்டிபட்டி ஸ்டார்.சா.நாகராசன் தலைமை வகித்தார்.
ம. சுருளிராசு (தேனி மாவட்ட தலைவர்), இரா. ஆண்டிச்சாமி, சோ.குட்டி, மு.விவேக், மு.அழகர்ராஜா, செ.கண்ணன், அ.மன்னர் மன்னன், மு.அன்புக்கர சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஸ்டார்.நாஜீவா, ம. அரி விஸ்வநாதன், ஆ தனுஷ், கா. சஞ்சீவிகுமார், காவலர் பா. குமார், சித்தா அருணாச்சலம் ஆகியோர் முதல் குருதிக்கொடை வழங்கி விழாவை துவக்கி வைத்தனர்.
குருதிக்கொடை முகாமின் சிறப்பு
ஆண்டுதோறும் உள்ளூர், வெளியூர், பிற மாவட்டங்களில் இருந்தும் வந்து குருதி கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு அதிக குருதிக் கொடையாளர்கள் குருதி கொடுத்து சிறப் பித்தனர். தந்தை பெரியார் கொள்கைக்கு கிடைத்த வெற்றியாய் அனைத்து மதத்தினரும், வணிகர்களும், மருத்துவர்கள், கூலித் தொழிலாளிகள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் கல்லூரி மாணவிகள், பெண்கள் மிக முக்கியமாக கணவன் மனைவியாக, அப்பா பிள்ளைகளுடன், தாத்தா பேரனுடன், வரதராஜபுரம் இராமு – வீரம்மாள் குடும்பத்தினர் பலரும் வந்து குருதிக்கொடை வழங்கினர்.
ஆண்டிபட்டியில் 2002 – ஆம் ஆண்டு குருதிக்கொடை முகாமைத் துவக்கி வைத்தவர் பெரியார் நெறியாளர் மதுரை பி. வரதராசன் மணியம்மை மழலையர் பள்ளி தாளாளர் கலந்து கொண்டார்கள்,
தேவாரம் தேனி ஜமீன்தார் ந. விஜயன் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினார். ராஜ்குமார் ரெட் கிராஸ் மதுரை தேனி மாவட்ட வெற்றி தமிழர் பேரவை தலைவர் கோ. மணி கார்த்திக், வழக்குரைஞர் திருமலை வெங்கடேஷ், ஓசூர் செல்வம், ஓசூர் கிருஷ்ணன், போடி பெரியார்மணி, ஒ.அன் னக்கொடி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட குருதிக்கொடையாளர்கள் கலந்து கொண்டனர். தகுதி உள்ள கொடை யாளர்களிடம் குருதி பெற்று நன்கொடையாக அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. குருதிக் கொடுத்த அனைவருக்கும் உணவு, பிஸ்கட், பழங்கள், குளுக்கோஸ் பெட்டிகள் வழங்கப்பட்டன. மதர் பிரட் சார்பில் ஜூஸ் பொரி வழங்கப்பட்டது.
ஸ்டார் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் இணைந்து விழாவை ஒருங்கிணைத்தனர்.
ஆண்டிபட்டி நகர திராவிடர் கழகத்தின் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.