நாகர்கோவில், அக். 3- குமரி மாவட்ட கழக சார்பாக நாகர்கோவில் மாநகரப் பகுதி மற்றும் வடசேரி பகுதியில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பரப்புரையைத் தொடங்கி வைத்தார். காப்பாளர் ம.தயாளன், பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, மாவட்ட காகத் துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், மாவட்ட மேனாள் அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், கழக துணைச் செயலாளர் சி.அய்சக் நியூட்டன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச.இந்திராமணி, இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ், கோட் டாறு பகுதி தலைவர் ச.ச. மணிமேகலை, தோழர்கள் குமரிச்செல்வன், முத்து வைரவன் மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.
தந்தை பெரியாருடைய கொள்கை நூல்கள், துண்டறிக்கைகள், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்களுடைய நூல்கள் மக்களுக்கு வழங் கப்பட்டன.