முதல் சுயமரியாதை மாகாண மாநாடு நடைபெற்ற அதே மண்ணில் கூடுவோம்
சாதனை சரித்திரம் படைத்த முதலமைச்சர் வருகிறார் – வருகிறார்
அந்தத் தொண்டறத்தை வரவேற்க வாரீர் – வாரீர் தோழர்களே
ஒளிரட்டும், பெரியார் உலகமயம் – உலகம் பெரியார் மயம் ஆகட்டும்!
தமிழர் தலைவர் அழைக்கிறார், அழைக்கிறார்! வாரீர், வாரீர்!!
சாதனை சரித்திரம் படைத்த முதலமைச்சர் வருகிறார் – வருகிறார்
அந்தத் தொண்டறத்தை வரவேற்க வாரீர் – வாரீர் தோழர்களே
ஒளிரட்டும், பெரியார் உலகமயம் – உலகம் பெரியார் மயம் ஆகட்டும்!
தமிழர் தலைவர் அழைக்கிறார், அழைக்கிறார்! வாரீர், வாரீர்!!
சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநாடு நடைபெற்ற அதே மண்ணில், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – நாளை மறுநாள் நடைபெற உள்ளது. சாதனைகளால் சரித்திரம் படைக்கும் நமது முதலமைச்சரை வரவேற்க வாரீர்! வாரீர் என்று திராவிடர் கழகத் தலைவர் அழைக்கும் அறிக்கை வருமாறு:
- முதல் சுயமரியாதை மாகாண மாநாடு நடைபெற்ற அதே மண்ணில் கூடுவோம் சாதனை சரித்திரம் படைத்த முதலமைச்சர் வருகிறார் – வருகிறார் அந்தத் தொண்டறத்தை வரவேற்க வாரீர் – வாரீர் தோழர்களே ஒளிரட்டும், பெரியார் உலகமயம் – உலகம் பெரியார் மயம் ஆகட்டும்! தமிழர் தலைவர் அழைக்கிறார், அழைக்கிறார்! வாரீர், வாரீர்!!
- ‘திராவிட மாடல்’ அரசு மீண்டும் வர வேண்டும்
- 1929இல் முதல் சுயமரியாதை மாகாண மாநாடு நடந்த அதே மண்ணில்….
- வருகிறார் திராவிடச் சிற்பி!
- உலகம் பெரியார் மயம், பெரியார் உலகமயம்!
திராவிடர் இயக்க தீரர்களே,
பகுத்தறிவாளர்களே,
தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசின் பயனாளிகளே, மக்களாட்சி காக்கும் பெருமக்களே,
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. பாசிசம் தமிழ்நாட்டில் காலூன்றக் கூடாது என்ற பொதுக் கவலையுள்ள பெரு மக்களே!
‘திராவிட மாடல்’ அரசு மீண்டும் வர வேண்டும்
நாளை மறுநாள் (4.10.2025) மறைமலைநகரில் (செங்கற்பட்டு) மிகப் பெரும் திரள் மாநாடாக நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – நமக்கு சுயமரியாதை, பகுத்தறிவு, மனுதர்மம் ஒழித்த சமதர்ம சிந்தனை பரவிடவும், சீர்மிகு பிற மாநிலங்களும், உலகமும் வியந்து பாராட்டும் – சமூகநீதித்துறையில் சரித்திரம் காணா சாதனை புரியும் ‘திராவிட மாடல்’ ஆட்சி மீண்டும் அரியாசனத்தில் அமர்ந்தால்தான் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வதிந்த ஒடுக்கப்பட்ட மக்களான நமது மக்கள் சரியாசனம் பெற முடியும் என்பதற்குமான விழிப்புணர்வை வற்புறுத்த மாநாடு!
நம் விழி திறந்த வித்தகர், புதிய வழிகாட்டி, மானத்தையும், அறிவையும் நம்முள் விதைத்து, மனுதர்மத் தாழ்ந்த தமிழ்நாட்டை மட்டும் அல்ல; வீழ்ந்த மக்கள் உலகின் எம்மூலையில் இருப்பினும் அவர்களுக்கான எழுச்சியைப் பெற வைக்கும் ஒரு சமூகப் புரட்சியாளர் அறிவாசான் தந்தை பெரியார் – ஒரு நூற்றாண்டுக்கு முன் தொடங்கி, ஒப்பிட முடியாத சாதனை புரிந்து – தொடர்ந்த எதிர் நீச்சல்களிலும் அடித்தளம் எழுப்பிய மகத்தான மாளிகைக் கட்டுமானமே சுயமரியாதை இயக்கம்!
1929இல் முதல் சுயமரியாதை மாகாண மாநாடு நடந்த அதே மண்ணில்….
சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், பெண்ணுரிமை மலர்ந்து, ஜாதி ஒழிந்த ஒரு சமுதாயத்தைப் படைத்திட, அதே மண்ணில் (செங்கற்பட்டு) – சென்னை மாகாண சுயமரியாதை இயக்க முதல் மாநாட்டினை 1929இல் நடத்திய தந்தை பெரியார் புதியதோர் புரட்சியுகத்தின் பிரகடனங்களை ெவளியிட்டார்.
நீதிக்கட்சித் தொடங்கிய 1920இல் இருந்து – 2025இல் அது ‘திராவிட மாடலாக’, அய்யா பெரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆட்சியாக, மானமிகு சுயமரி யாதைக்காரரான கலைஞர் தம் ஆட்சியில் நடத்திக் காட்டி வென்ற சமத்துவக் கொள்கைப் பயணத்தோடு தொடர்கின்றது.
திக்கெட்டும் பாராட்டும் திராவிட நாயகன் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ‘திராவிட மாடல்’ ஆட்சி – அது ஒரு முழு உருபெருக் கொள்வதை மக்கள் மகிழ்ந்து – உலகம் பாராட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாத திராவிடக் கொள்கை எதிரிகள் இவ்வாட்சியை எதிர்க்க, அழிக்க வரும் 2026ஆம் ஆண்டுத் தேர்தலையொட்டி கூலிப்படைகளை, ‘குத்தகைப் படைகளையும்’, சினிமா கவர்ச்சியாளர்களையும் மட்டுமே நம்பி, பல ஏமாற்று உத்திகளோடு வருகின்றனர். அவர்களை அடையாளம் கண்டு எச்சரித்து, நம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவிருக்கும் மாநாடே – மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு!
வருகிறார் திராவிடச் சிற்பி!
ஒப்பற்ற நம் முதலமைச்சர், பழிக் குற்றச்சாட்டுகளை தூசிகள் எனத் தட்டி விட்டு கம்பீர நடையுடன் நம்முடன் வரவிருக்கின்றார்! நன்றியுள்ள அனைவரும் அவரை வரவேற்க வர வேண்டாமா?
நமது முதலமைச்சர் கோடானு கோடி மக்களது, இதயச் சிம்மாசனத்தில் அவர் அன்பு, அறம், ஆளுமைகளில் நிலைத்திருப்பவர். வெற்று விளம்பரச் சரக்கல்ல; மாறாக நாளும் சரித்திரம் படைக்கும் தன்மானப் பெருந் தலைவர்.
‘‘தலைகுனிய விட மாட்டோம் தமிழ்நாட்டை’’ என்று சூளுரைத்து – சூடு போட்டு வரும் செயல் வடிவ திராவிடச் சிற்பி அல்லவா?
பழிதூற்றல், தகுதியற்றவர்கள் தலை கொழுத்துக் கூறுகின்ற அவதூறு தூசுகளைத் தட்டி – இடையறாத் தொண்டாற்றும் தொண்டறத்தை வரவேற்க வர வேண்டாமா?
வாருங்கள் தோழர்காள் அனைவரும்!
கைகோர்த்து நின்று – போராதரவு தந்து – பெரிய திருப்பத்தை ஏற்படுத்துவோம்!
முரசொலிக்க வாருங்கள் தோழர்களே!
‘‘அடாது மழை என்றாலும் விடாது நடக்கும் எம் நிகழ்ச்சி’’ என்பதற்கேற்ப சரியான ஏற்பாடுகள் தயார்!
பருவம் பார்த்து உழைப்பதற்கு என்றும் தயங்காதவர்களல்லவா நாம்!
உலகம் பெரியார் மயம், பெரியார் உலகமயம்!
தமிழ்நாட்டின் அத்தனை சுயமரியாதைக் குடும்பங்கள் சங்கமமாகும் மாநாடாகட்டும் – மறைமலைநகர் மாநாடு.
ஒளிரட்டும் – ‘‘பெரியார் உலகமயம் – உலகம் பெரியார் மயம்’’ என்பதை நம் எதிரிகளுக்கு– அவர்களுடன் உதிரிகளுக்கும் உணர்த்திட வாருங்கள்! வாருங்கள்!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
2.10.2025