ஆவடி, அக் 2– ஆவடி மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 28.9.2025 அன்று மாலை 5 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் ஆவடி நகர கழக செயலாளர் இ.தமிழ்மணி கடவுள் மறுப்பு கூற மாவட்ட கழக துணைத் தலைவர் மு.ரகுபதி முன்னிலையில், மாவட்ட கழக செயலாளர் க.இள வரசன் ஒருங்கிணைப்பில், மாவட்ட கழக தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து பகத்சிங் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பை திருநின்றவூர் நகர கழக இளைஞரணி செயலாளர் மா.சிலம்பரசன் வாசித் தார். தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 17.9.2025 மற்றும் 21.9.2025 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியின் வரவு, செலவு கணக்குகளை ஆவடி நகர கழகச் செயலாளர் இ.தமிழ்மணி ஒப்படைத்தார்.
இறுதியாக அக்டோபர் நான்காம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிற்கு ஆவடி மாவட்ட கழகம் சார்பில் மூன்று வேன்கள் இரண்டு கார்களில் செல்வது என்றும், முதல் வாகனம் ஆவடி நகர கழக தலைவர் கோ. முருகன் தலைமையிலும், இரண் டாவது வாகனம் அம்பத்தூர் நகர கழக தலைவர் பூ..இ.ராமலிங்கம் தலைமையிலும், மூன்றாவது வாகனம் ஆவடி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் சு. வெங்கடேசன் தலைமையிலும் புறப்படுவது என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஆவடி நகர கழக தலைவர் கோ.முருகன், செயலாளர் இ.தமிழ்மணி, மாவட்ட கழக மகளிர் அணி தலைவர் சி ஜெயந்தி, மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் சு. வெங்கடேசன், மகளிர் பாசறை செயலாளர் அன்புச்செல்வி, திருநின்றவூர் கழக செயலாளர் கீதா ராமதுரை, அம்பத்தூர் நகர கழக தலைவர் ராமலிங்கம் .நகரச் செயலாளர் சரவணன், திருமுல்லைவாயல் பகுதி கழக தலைவர் இரணியன் (எ) அருள்தாஸ், உடுமலை வடிவேல், வி.சி.வில்வம், ஆவடி புருஷோத்தமன், அயப்பாக்கம் ஹரி கிருஷ்ணன்,
மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.கார்த்திக்கேயன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் ஜெயராமன், பெரியார்பெருந்தொண்டர்கள் அம்பத்தூர் அ.வெ.நடராசன், துரை முத்துகிருஷ்ணன், மாவட்ட கழக மேனாள் செயலாளர் சிவக்குமார், திருமழிசை கார்த்திக், வெள்ளவேடு கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக திருநின்றவூர் நகர கழக இளைஞரணி செயலாளர் மா. சிலம்பரசன் நன்றி கூற கூட்டம் இனிதே முடி வடைந்தது.