திண்டிவனம், அக்.2– திண்டிவனம் கழக மாவட் டம் மயிலம் ஒன்றிய கழகம் சார்பில் தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழகக் கொள்கை விளக்கம், திராவிடமாடல் ஆட்சியின் சாதனைகள் விளக்க தொடர் தெருமுனை பிரச்சாரப் பயண தொடக்க விழா மற்றும் பெரியார் பகுத் தறிவுப் பலகை திறப்பு விழா 29.9.2025 திங்கட்கிழமை மாலை 4.00.மணி அளவில் தழுதாளி கிராமத்தில் மாவட்ட துணைத் தலை வர் ச.அன்புக்கரசன் தல மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் தா.இளம்பருதி வரவேற்புரை யாற்றினார். தொடர்ந்து மாவட்டதலைவர் இரா.அன்பழகன், பொதுக் குழு உறுப்பினர் பா. வில்ல வன்கோதை ஆகியோர் உரையாற்றினர்.
விழாவில் மாவட்ட காப்பாளர் செ.பரந்தாமன் பெரியார் பகுத்தறிவு பலகையை திறந்து வைத்து உரையாற்றினார்.
அடுத்து விழாவில் சிறப்புரை ஆற்றிய மாநில திராவிடர் மாணவர் கழக துணை செயலாளர் மு.இளமாறன், ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு என திராவிடர் கழகத்தின் கொள்கைகளை விளக்கியும், நூற்றாண்டு நிறைவு விழா காணும் சுயமரியாதை இயக்கம் இந்த மண்ணில் ஏற்படுத் திய புரட்சியையும், ரசிக மனப்பான்மையில் வாழ்க்கையை இழக்கும் இளைஞர்களின் சுயமரி யாதை மீட்புக் குறித்தும், பார்ப்பன பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ்-இன் ஸநாதன திட்டங்களை விளக்கியும், அதனை எதிர்த்து களமாடும் நம் திராவிட மாடல் அர சின் தேவையை கூறியும் உரையாற்றினார்.
இறுதியாக ஒன்றிய மகளிர் அணி தலைவர் லட்சுமி பாவேந்தன் நன்றி கூறினார். நிகழ்வில் மாவட்ட இளைஞரணி தலைவர் மு.இரமேஷ் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் கஸ்தூரி அன்புக் கரசன் கன்னியம் கிளை கழக செயலாளர் ர.பழனி தலைவர் இராமதாஸ், மயிலம் ஒன்றிய தலைவர் இரா.பாவேந்தன், தழுதாளி திமுக கிளை செயலாளர் இராமச்சந்திரன், கலை வாணன் வி.சி.க மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.