பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)
தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்ப டிஜிட்டல் சேவையும் இணைந்து
தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்ப டிஜிட்டல் சேவையும் இணைந்து
வல்லம், அக். 2– பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்) – தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை டிஜிட்டல் சேவையும் இணைந்து நடத்தும் ‘யூத்டாக்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
பல்கலைக்கழக பேராசிரியர் பா.இளங்கோவன் (கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மற்றும் அய்சிடி அகாடமியின் ஒருங்கிணைப்பாளர்) யூத்டாக்கின் சிறப்பு அம்சங்களை எடுத்துரைத்து வரவேற்றார்.
பல்கலைக்கழக இணை துணைவேந்தர் ஆர்.மல்லிகா உரையாற்றும் போது, விரிவான தேர்வு செயல் முறை மூலமாக 100 மாணவர்களை அய்சிடி அகாடமி அமைப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நம்மை எதனால் தேர்தெடுந்தார்கள் என்பதற்கு தங்களுடைய திறமைகளை வாய்மொழி தொடர்பு உரையாடல் மூலமாகவும் மற்றும் எடுத்தாளும் திறனாகவும் பேச்சுத் திறமையாலும், குரல் மொழியியல் வழியாகவும் இந்நிகழ்வு நடைபெற்றது.
பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் கூறியது போல் ‘நம்மால் முடியாதது யாராலும் முடியாது யாராலும் முடியாதது நம்மால் மட்டும் முடியும்’. மேலும் மாணவர்களாகிய நீங்கள் என்னவாக வேண்டும் என்று ஒரு இலக்கை நிர்ணயித்துக்கொண்டு அதற்கு தகுந்தாற்போல் அதனை பெறவேண்டும் என்று கூறினார்.
சிங்கப்பூர் செல்வதற்கான வாய்ப்பு
வி.பூர்ண பிரகாஷ் மாநில தலைவர் உரையாற்றும்போது இந்த நிகழ்வு யூத்டாக் என்பது 10 ஆண்டுகளாக நிகழ்கிறது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், நெல்லை, புதுச்சேரி, சேலம் ஆகிய 7 பிராந்தியத்திலிருந்து நடைபெறுகிறது. இந்த 7 பிராந்தியலிருந்து 20 ஆயிரம் மாணவர்களை தேர்ந்தெடுத்து அதில் திருச்சி பிராந்தியத்திலிருந்து 100 மாணவர்களை தேர்ந்தெடுத்து அதற்கான நிகழ்வு இன்று (1.10.2025) நடைபெறுகிறது. இதில் மேலும் 20 மாணவர்களை தேர்ந்தெடுத்து அதிலிருந்து 10 மாணவர்களை தேர்ந் தெடுத்து அதிலிருந்து 1 மாணவரை தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 7 பிராந்தியத் திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாண வர்களை அக்டோபர் 13ஆம் தேதி அன்று கோயம்புத்தூர் கொடுசியாவில் நடைபெறும் யூத்டாக் நிகழ்ச்சியில் பங்கு பெறும் மாணவர்களிலிருந்து 3 பேர் தேர்வு செய்யப்பட்டு அய்சிடி அகாடமி மூலம் சிங்கப்பூர் செல்வதற்கான வாய்ப்பை பெறுவார்கள்.
இந்நிகழ்வின் மூலம் நல்ல தொழிற் சாலைகளில் நல்ல வேலைவாய்ப்பு பெற்று சென்று இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியை மொழியியல் துறை பேராசிரியர் பெரில் சவுந்தர்யா மற்றும் ரம்யாபேஷன் தொகுத்து வழங்கினார்கள்.
இரண்டாம் நிகழ்ச்சிக்கு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வேலைவாய்ப்புத் துறையின் இயக்குநர் பேராசிரியர் பி.குரு வரவேற்புரையாற்றினார். அவர் தமது உரையில், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் அய்.சி.டி அகாடமி ஏற்பாடு செய்துள்ள இளைஞர் பேச்சின் இறுதி நிகழ்வுக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
பெண்கள் அதிகாரம்
பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா வெ.இராமச்சந்திரன் தலைமை யுரையாற்றும்போது அய்.சி.டி அகாடமி பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. ஆசிரியர் மேம்பாடு, மாணவர் திறன் மேம்பாடு, தொழில் ஒத்துழைப்பு, டிஜிட்டல் கற்றல் மற்றும் தொழில்நுட்ப தத்தெடுப்பு. அதன் சமூகப் பொறுப்பை நாம் பாராட்ட வேண்டும். இளைஞர் பேச்சு, ஹேக்கத்தான்கள் மற்றும் தலை மைத்துவ உச்சி மாநாடுகள் மற்றும் பெண் தலைவர் மன்றங்கள் போன்ற முயற்சிகளுடன் பெண்கள் அதிகார அளிப்பினை ஊக்குவிக்கிறது. தொழில் நிபுணர்களை கல்வி நிறுவனங்களுக்கு அழைத்து வருவதன் மூலம் கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பை மேம்படுத்துகிறது.
அய்சிடி அகாடமி என்பது கல்வி மற்றும் பயிற்சியைப் பற்றியது மட்டுமல்ல. இது சமூகப் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவது, அறிவை அணுகுவதில் உள்ள சமத்துவமின்மையைக் குறைப்பது மற்றும் உள்ளடக்கிய தேசிய வளர்ச்சியை முன்னெடுப்பது பற்றியது.
தனித்துவமான தளம்
‘யூத்டாக்’ என்பது அய்சிடி அகாடமியின் முதன்மை முயற்சியாகும் மற்றும் இது இளம் மாணவர்கள் தங்கள் குரலைக் கண்டறிய ஒரு வாய்ப்பாகும். கல்லூரி மாணவர்கள் நம்பிக்கை, தெளிவு மற்றும் நோக்கத்துடன் பேச ஊக்குவிக்கும் ஒரு தனித்துவமான தளமாகும்.
இந்த நிகழ்வு சந்தேகத்திற்கு இடமின்றி ஆயிரக்கணக்கான இளம் மாணவர்கள் தங்கள் கருத்துகளை குறுகிய உத்வேகப் பேச்சுக்கள் மூலம் பகிர்ந்து கொள்ள ஊக்கமளித்துள்ளது.
இந்த ஆண்டு யூத் டாக் நேற்று (1.10.2025) இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மாநிலம் முழுவதியிலுமிருந்து மாணவர் கள் வளாக அளவிலான, பிராந்திய மற்றும் இறுதிக்கு முந்தைய சுற்றுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்போது எங்கள் நிறுவனத்தில் நடைபெறும் இந்த மாபெரும் இறுதிப் போட்டியில் தங்கள் சிறந்த உரைகளை வழங்க இங்கே வந்துள்ளனர்.
மொழித்திறன்
தீர்ப்பளிக்கும் அளவுகோல்கள் தெளிவாகவும் வெளிப்படையாகவும் உள்ளன. தலைப்பின் தேர்வு மிகவும் முக்கியமானது. உள்ளடக்கம் அர்த்தமுள்ளதாகவும், ஊக்கமளிப் பதாகவும், அசலாகவும் இருக்க வேண்டும். 10 நிமிடங்கள் மொழித் திறன், நம்பிக்கை மற்றும் பார்வையாளர்களை ஈடுபடுத்தும் திறன் ஆகியவை அளவிடப்படுகின்றன.
ஆரம்ப சுற்றுகளில், சமர்ப்பிக்கப்பட்ட காணொலியில் தரம் கருத்தில் கொள் ளப்பட்டது. மேலும் இறுதிக் கட்டத்தில், நேரத்தை கண்டிப்பாக கடைப்பிடிப்பதும் மதிப்பீடு செய்யப்படுகிறது. இது தொடர்பு, தலைமைத்துவம் மற்றும் விளக்கக்காட்சி திறன்களை உருவாக்குகிறது. இது சாதாரண மாணவர்களை அசாதாரண இளைஞர் சின்னங்களாக மாற்றுகிறது. இந்த இறுதி நிகழ்வை நடத்துவதில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) சார்பில் மிகவும் பெருமைப்படுகிறோம்.
மாணவர்களுக்கு அறிவை மட்டு மல்ல, நம்பிக்கை மற்றும் வாழ்க்கைத் திறன்களையும் வழங்குவதற்கான உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது. நிறுவனத்தின் சார்பாக இன்று இங்கு வந்துள்ள அனைத்து பங்கேற்பாளர் களையும் நான் அன்புடன் வரவேற்கி றேன்.
திறமை – உத்வேகம்…
மேலும் இந்த இளைஞர் பேச்சு நாளைய தலைவர்களாக வளர உங்களுக்கு உதவட்டும். இந்த வார்த்தைகளுடன், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) இளைஞர்கள், திறமை மற்றும் உத்வேகத்துடன் அமையட்டும் என கூறினார்.
அய்சிடி அகாடமியின் இணை தலைவர் இராகவா சீனிவாசன் உரையாற்றும் போது, தனி மனிதனாக “நாம் என்ன சமூதாயத்திற்கு செய்கிறோம் என்பதை மாணவர்களாகிய நீங்கள் உணரவேண்டும். எங்கள் காலக்கட்டத்தில் இது போன்ற நிறுவனத்திலிருந்து வேலை வாய்ப்புக்கான தேர்வு நடைபெறவில்லை. இப்போதுதான் அந்த வாய்ப்பு உங்களை தேடி வேலை வாய்ப்பு வருகிறது என்றும் அந்த வேலை வாய்ப்பினை பல்வேறு நிலைகளில் மாணவர்களாகிய நீங்கள் தங்களுடைய திறமைகளை கொண்டு அதிகபட்ச ஊதியத்திற்கு செல்லலாம்” என்று கூறினார்.
மாணவர்களுக்கு பரிசளிப்பு
இறுதியாக போட்டியில் மூன்று மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள். பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் பேரா பி.கே.சிறீவித்யா மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கினார். அய்சிடி அகாடமியின் இராகவ் சீனிவாசன் இணைத்தலைவர், பூர்ணபிரகாஷ் மாநில தலைவர், தொடர்பு மேலாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். முதலாம் பரிசினை எஸ்.வி.வர்ஷினி, இளங்கலை செயற்கை நுண்ணறிவு துறை, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும், வல்லம். இரண்டாம் பரிசினை பூஜா, கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை கே.இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி திருச்சி, மூன்றாம் பரிசினை கன்னிகா வணிகவியல் துறை புனித சிலுவைக் கல்லூரி, திருச்சி, இந்த மூவரும் திருச்சி பிராந்தியத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு இந்த திருச்சி பிராந்தியத்திலிருந்து முதலிடம் பெற்ற ஒருவர் தேர்வு செய்யப்பட்டு இவர்கள் அனைவரும் அக்டோபர் 13 அன்று கோயம்புத்தூரில் கொடிசியா அரங்கத்தில் நடைபெறும் இறுதி சுற்றில் கலந்து கொண்டு இந்த 7 பிராந்தியத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்களில் முதலிடம் பிடித்த ஒருவர் சிங்கப்பூருக்கு கல்விச்சுற்றுலா செல்வதற்கு தகுதி பெறுவார்.
இறுதியாக பல்கலைக்கழக மேலாண்மை துறை முதன்மையர் பேரா மகேந்திரமோகன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியை ஏற்பாட்டினை மேலாண்மைத் துறை மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்கள் பல்கலைக்கழக மொழியியல் துறை போரசிரியர்கள் த.பெரில் சவுந்தினி மற்றும் ரபியா பசரி தொகுத்து வழங்கினார்கள்.