பெரியாரைக் கொண்டு செல்லும் 21 மொழிகள் எவை, எவை? என்பது பற்றி மானமிகு ஆசிரியர் அய்யா கி வீரமணி பேசிய கருத்துக்கள் மிகச் சிறப்பு வாய்ந்தது
இந்திய மொழிகளான அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஓடியா, மராத்தி, உருது, பஞ்சாபி, ஹிந்தி, போஜ்புரி ஆகிய 12 மொழிகளில் மட்டுமின்றி அயல்நாட்டு மொழிகளான
ஆங்கிலம், பிரென்ச், ஸ்பானிஷ், உயிர் அரேபியா, ஜெர்மன், ரஷ்யா, கொரியன், இத்தாலி, ஜப்பானீஸ், ஆக மொத்தம் 21 மொழிகளில் பெரியாரை உலகமயமாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வெளிநாட்டினர் புத்தகம் போட்டு சிந்தனையை பரப்பினம் செய்வார்கள். சோம இளங்கோவன் இதைப் பற்றி கூறுகையில் IHU (International Humanethical Union) என்ற அமைப்பு பாரிஸில் நடத்திய மாநாட்டில் பெண் ஏன் அடிமை ஆனாள் என்ற பெரியாரின் புத்தகத்தை படித்த அறிஞர் ஒருவர் மறுநாள் அதை காட்சிப்படுத்திய நபரை தேடி கண்டுபிடித்து கட்டித்தழுவி இப்படி ஒரு புத்தகத்தை என் வாழ்நாளில் படித்ததில்லை என்று பாராட்டினார். வெளிநாடுகளில் முதலாளி – தொழிலாளி, பணக்காரன் – ஏழை போன்ற பாகுபாடுகள் மட்டுமே இருந்து வருகின்றன. நம் நாட்டைப் போல மேற்கண்டவற்றுடன் ஜாதி தீண்டாமை என்று வேறு எங்கும் இல்லாத கொடுமை நிலவி வருகிறது. எதை ஒழிக்கவே பெரியார் மூன்று பற்றுக்களை மானுடப் பற்று, உணர்ச்சி பற்று, அறிவுப்பற்று ஆகியவற்றை சிந்தித்து கடைபிடிக்க சொல்கிறார். பெரியாருக்கு முன்பாக ராமகிருஷ்ணர் ராமலிங்க அடிகளார் ராமானுஜர் போன்றவர்கள் பேசியிருப்பார்கள் எழுதியும் இருப்பார்கள் ஆனால் பெரியார் ஒருவர் மட்டுமே பேசியது எழுதியது மட்டுமில்லாமல் செயலிலும் செய்து காட்டி பரப்புரை செய்தார்…. என்று தொடர்ந்து அரிய பல கருத்துக்களை முழுவதும் காண இன்றே பாருங்கள் Periyar Vision OTT. நன்றி.
– ஜே பஞ்சாபகேசன்
திண்டிவனம்
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்! இணைப்பு : periyarvision.com