- காலையில் அவ்வளவு தாமதமாக நடிகர் விஜய் சென்னையிலிருந்து கிளம்பியது ஏன்?
- கரூரில் மதியம் 3 மணிக்கு என்று காவல்துறை யிடம் அனுமதி பெற்றுவிட்டு, 12 மணிக்கு விஜய் பேசுவார் என்று செய்தி வெளியிட்டது ஏன்?
- சிறிய இடத்தில் தான் இந்தப் பிரச்சினை என்கிறார்களே, அது தெரிந்தும் சாலைகளில் நின்று பிரச்சாரம் செய்யும் முறையைத் தேர்ந்தெடுத்தது ஏன்?
- பல ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய மைதானத்தில், மாநாடு நடத்தும்போதே உயிர்ப்பலிகள், தள்ளுமுள்ளு, கூட்ட நெருக்கடி, தண்ணீர், கழிவறை உள்பட அடிப்படை வசதிகள் இல்லாமல் அல்லல்படுவது, மக்கள் மயக்கமுறுவது எல்லாம் நடந்தது தானே! அவ்வளவு பெரிய மைதானங்களில் கூட ஒழுங்கின்றி நடந்து கொள்ளவில்லையா? எவ்வளவு பெரிய இடம் கொடுத்தாலும் ஒழுக்கமாக நடந்துகொள்வார்களா இவர்கள்?
- அவர்களே நிகழ்ச்சிக்காக நட்ட மின்கம்பங் களிலும், மரங்களிலும், விளக்குக் கம்பங்களிலும், கட் அவுட்டுகளிலும், பக்கத்துக் கட்டடங்களிலும், கடைகளிலும், வீடுகளிலும் கும்பல் கும்பலாக ஏறி ஆபத்தை உருவாக்கியது இவர்கள் தானே! தடுக்க வந்தவர்களை மிரட்டி, கடைகளை உடைத்து நாசம் செய்தவர்கள்தானே இவர்கள்?
- உயர்நீதிமன்றம் உரிய வழிகாட்டுதல் வழங்கி யும்கூட பெண்களையும், குழந்தைகளையும் கூட்டியது யார்?
- கரூருக்கு முன்பே விக்கிரவாண்டியிலும், மதுரையிலும் உயிர்ப் பலிகள் இவர்களின் கூட்டங் களில் நடைபெற்றுள்ளனவே, அதன் பிறகும் அதை ஒழுங்கு செய்யாதது ஏன்?
- மாநாட்டுக்கு வருவோர் தன்னை நெருங் காதபடி, தடுப்புக் கம்பிகளில் கிரீஸ் தடவி, தன்னைப் பாதுகாத்துக் கொண்டவர் தானே நடிகர் விஜய்? அவ்வளவு நம்பிக்கையா தனது ரசிகர்கள் மீது?
- இவ்வளவு தாமதமாக ஏன் நடிகர் விஜய் வந்தார் என்று கேள்வி எழுப்ப மறுப்பது ஏன்?
- தான் பேசிக் கொண்டிருக்கும்போதே, தன் கண் முன்னரே மக்கள் மயக்கமுறுவதையும், அவர்களைத் தூக்கிச் செல்வதையும் கண்டும் காணாமல் எழுதித் தரப்பட்ட ஸ்கிரிப்டைப் படிப்ப திலேயே தனது கவனத்தைச் செலுத்தினாரே, அதை நோக்கி ஏன் கேள்வி எழுப்ப மறுக்கிறீர்கள் ரசிகர்களே?
- நெரிசல் ஏற்பட்டு, பிரச்சினை பெரிதாகிறது என்று தெரிந்ததும், எதுவும் சொல்லாமல் பேச்சை முடித்துக் கொண்டு, இவ்வளவு மக்கள் நெருக்கடிக்கு மத்தியில் நடிகர் விஜய் எப்படி வெளியேறினார் என்று கேள்வி எழுப்பப்பட வேண்டாமா?
- கரூரை விட்டு, திருச்சிக்கு விரைந்து, உடனடி யாக சென்னைக்குத் தனி விமானம் மூலம் ஓடியது ஏன்? இது தான் தலைவருனுக்கான அழகா? இவர் தான் ஹீரோவா? நாயகனா? இவருக்காகவா இத்தனை இழப்புகள்?
- தாங்கள் நடத்திய கூட்டத்துக்கு வந்து நெரிசலில் சிக்கி 41 பேர் மறைந்த கொடூரத்துக்கு இறுதி மரியாதை செலுத்தக் கூட நடிகர் விஜயோ, மற்ற கட்சிப் பொறுப்பாளர்களோ வராதது ஏன்?
மக்கள் எதிர்பார்த்துக்கூடி நிற்கும் இடங்களில், இவர் பிரச்சார வாகனத்தின் கதவைத் திறந்து பேசா விட்டாலும், கை அசைத்து வணக்கம் தெரிவித்திருந்தால் அந்தந்தப் பகுதி மக்கள் இடம் ெபயர்ந்திருப்பார்களே! மக்களை ஒரே இடத்தில்கூடச் செய்து தனக்கு இவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்று சினிமா பாணியில் காட்டுவதற்குத்தானே!
இன்னும் எண்ணற்ற கேள்விகள் த.வெ.க.வின ரையும், அதன் தலைவர் நடிகர் விஜய்யையும் நோக்கி எழுகின்றன.
பதில் சொல்வார்களா? முழுக்க முழுக்க அலட்சியத்தாலும், அகம்பாவத்தாலும் 41 உயிர் களைப் பலி கொண்டுவிட்டு, அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் பொறுப்புணர்ச்சி இன்றி அடுத்தவர் தலையில் கட்டுவது மட்டுமல்லாமல், இதை விட இன்னும் கலவரத்தைத் தூண்டும் நோக்கில் இளைஞர்களைத் திசைதிருப்பி தூண்டிவிடுவது சட்டம் ஒழுங்கைக் கெடுக்கும் சமூக விரோதச் செயலேயாகும்!
இளைஞர்களே, மாணவர்களே, மகளிரே சிந்திப்பீர்!