தேசிய குருதிக் கொடை நாள் மனித உயிரின் மதிப்பை உணர்ந்து குருதிக்கொடை வழங்கும் தன்னார்வலர்களை மனதார பாராட்டுகிறேன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, அக்.1- மனித உயிரின் மதிப்பை உணர்ந்து தயக்கமின்றி குருதிக் ெகாடை வழங்கும் தன்னார்வலர்களை மனதார பாராட்டுகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குருதிக் கொடை நாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குருதிக் கொடை என்பது கொடை யளிப்புகளில் மிக உன்னதமானதாகும். மனித உயிரை காக்கும் ஒரு மாபெரும் தன்னலமற்ற செயலாக குருதிக் கொடை கருதப்படுவதால், நவீன சுகாதார அமைப்புகளில் ரத்தம் வழங்குவது, மனித உயிரின் முக்கியத்துவத்தையும், மனித குணத்தின் மேன்மையையும் பிரதிபலிக்கிறது. இந்த தன்னார்வச் செயலின் அருமையை வலியுறுத்தும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ஆம் தேதி ‘தேசிய தன்னார்வ குருதிக் கொடை நாளாக கொண்டாடப்படுகிறது.

இது, பொதுமக்களிடையே குருதிக் கொடை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த ஆண்டிற்கான தேசிய தன்னார்வ குருதிக் கொடை நாளின் கருப்பொருள் “குருதிக் கொடை செய்வோம், நம்பிக்கை கொடுப்போம்: ஒன்றாக இணைந்து நாம் மனித உயிர்களைக் காப்போம்’ என்பதாகும்.

பொதுமக்களிடையே தன்னார்வ குருதிக் கொடைcின் முக்கியத்துவத்தை தெரிவிக்கும் பொருட்டு, மாநிலம் முழுவதும், பல்வேறு குருதிக் கொடை முகாம்கள், பல்வேறு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து சிறப்பாக நடத்தி வருகிறது.

9.50 லட்சம் யூனிட்

தமிழ்நாட்டில், கடந்த 2024-2025-ஆம் ஆண்டு அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் மூலமாக, 9.50 லட்சம் யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளன. அரசு ரத்த வங்கிகள் மூலமாக 4 ஆயி ரத்து 354 குருதிக் கொடை முகாம்கள் நடத்தப்பட்டு, 4.53 லட்சம் யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில், 99 விழுக்காடு ரத்தம் தன்னார்வ ரத்தக்கொடையாளர்கள் மூலமாக பெறப்பட்டது என்பது சிறப்புக்குரியது, பாராட்டுக்குரியது.

இவ்வாறு சேகரிக்கப்படும் ரத்தம், அரசு மருத்துவமனைகளில், சிகிச்சை பெறும் மருத்துவ பயனாளர்களுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், மனித உயிர் காக்கும் உன்னத நோக்கத் துடன் வழங்கப்பட்டு வருகிறது. நம் ஒவ்வொருவரின் உடலிலும் சுமார் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. குருதிக் கொடை செய்யும் போது, சுமார் 350 முதல் 450 மில்லி லிட்டர் மட்டுமே ரத்தம் எடுக்கப் படுகிறது. இதற்கு 20 நிமிடங்கள் தான் தேவைப்படுகிறது.

மனதார பாராட்டுகிறேன்

பொதுவாக 18 முதல் 65 வயது வரை உள்ள ஆரோக்கியமான ஆண் 3 மாதத்திற்கு ஒருமுறையும், பெண் 4 மாதத்திற்கு ஒரு முறையும் குருதிக் கொடை வழங்கலாம். வழங்கியவுடன் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் அன்றாட செயல்களில் ஈடுபடலாம். குருதிக் கொடை வழங்குவதால், உடலில் புதிய ரத்த அணுக்கள் உருவாகி  கொடை அளிப்போரின் நலனும் காக்கப்படும்.

மனித உயிரின் மதிப்பை உணர்ந்து, மருத்துவ பயனாளிகளுக்காக தயக்கமின்றி, குருதிக் கொடைவழங்கிட செய்ய முன்வரும் தன்னார்வ ரத்த கொடையாளர்களின் தன்னலமற்ற மனித உயிர் காக்கும் உன்னத பணியையும், சமூகத்திற்கு அவர்கள் செய்யும் பங்களிப்பையும் மனதார வாழ்த்தி பாராட்டுகிறேன். குருதிக் கொடை வழங்குவதில் ஒவ்வொருவருக்கும் உள்ள பொறுப்பை உணர்ந்து, மனித உயிர்களைப் பாதுகாக்கும் பணியில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *