தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (30.9.2025) பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை, சி.அய்.டி. நகர் பிரதான சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில். தியாகராயர் நகரில் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.அய்.டி. நகர் பிரதான சாலையை இணைக்கும் வகையில் 164.92 கோடி ரூபாய் செலவில் மேப்பாலம் கட்டப்பட்டு, மறைந்த தியாகராயர் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் நினைவாக “ஜெ. அன்பழகன் மேம்பாலம்” என்று பெயர் சூட்டப்பட்டு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ. கருணாநிதி, த. வேலு, தாயகம் கவி, துணை மேயர் மு. மகேஷ் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர்
தா. கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் நே. சிற்றரசு, வாரியத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.