விஜய் பிரச்சாரத்தின் போது கல் வீச்சு சம்பவம் நடைபெறவில்லை கூடுதல் காவல்துறை இயக்குநர் தகவல்

கரூர், செப்.29-      கரூரில் தவெக பிரச் சாரத்தின்போது கல்வீச்சு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறினார்.

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று  (28.9.2025) ஆட்சியர் மீ.தங்கவேல், காவல்துறை கூடுதல் இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மின்வாரிய தலைமைப் பொறியாளர் ராஜலட்சுமி ஆகியோர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது, ஆட்சியர் மீ.தங்கவேல் கூறும்போது, “கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேரும் சடலமாகத்தான் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். மயங்கி விழுந்தவர்களில் ஒருவர் உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 80 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார்.

காவல்துறை கூடுதல் இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறிய தாவது:  கரூரில் பிரச்சாரம் மேற்கொள்ள லைட் ஹவுஸ் முனை பகுதி யை முதலில் தவெக வினர் கேட்டனர். அங்கு பெட்ரோல் பங்க், அமராவதி ஆறு உள்ளதாலும், நெருக்கடியான இடம் என்பதாலும் அனுமதி வழங்கவில்லை. உழவர்சந்தை பகுதியும் குறுகலான பகுதி என்பதால் அனுமதி வழங்கவில்லை. வேலுசாமிபுரத்தில் ஏற்கெனவே வேறு கட்சி பிரச்சாரம் செய்ததால் அந்த இடம் வழங்கப்பட்டது.

கூட்டம் அதிகமான இடங்களில் 50 பேருக்கு ஒருவர் வீதம் பணியில் அமர்த்தப்படுவார். கரூரில் 20 பேருக்கு ஒருவர் என ஒரு  காவல்துறை கண்காணிப்பாளர், 4 கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் காவல்துறையினர் என 500 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மற்ற இடங்களைவிட அதிக காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது.

கல்வீச்சு சம்பவம் நடைபெறவில்லை

வேலுசாமிபுரத்தில் நடந்த பரப்புரை யின் போது கல்வீச்சு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. தவெக தலைவரின் வாகனம் கரூர் மாவட்டம் தளவாபாளையத்தில் இருந்து திருகாம்புலியூர் ரவுண்டானா வர 2 மணி நேரமாகியது. சாதாரணமாக 30 நிமிடங் களில் அந்த இடத்தைக் கடந்துவிடலாம். சிறிது நேரம் வாகனத்திலிருந்து வெளியே வந்த தவெக தலைவர், பின்னர் உள்ளே சென்றுவிட்டார். இதனால், அங்கிருந் தவர்களுக்கு அவரை பார்க்கும் ஆர்வம் அதிகரித்தது. அதீத கூட்டத்தால் பிரச்சார இடத்துக்கு முன்பே வாகனத்தை நிறுத்தி பிரச்சாரம் செய்யும்படி காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆனால், அந்த அறிவுறுத்தலை ஏற்காமல், திட்டமிட்ட இடத்திலேயே பிரச்சாரம் மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினர் கேட்டுக்கொண்டதா லேயே 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அனுப்ப ப்பட்டன. கூட்டம் காரணமாக ஆம்புலன்ஸ்கூட உள்ளே செல்ல முடியவில்லை. அனுமதிகேட்ட நேரத்தை விட 4 மணி நேரம் தாமதமாகவே பிரச் சாரத்தை தொடங்கினார். அதிக கூட்டம் கூடும் போது அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மின்வாரிய தலைமை பொறியாளர்

மின்சாரம் துண்டிக் கப்படவில்லை: மின் வாரிய தலைமைப் பொறியாளர் ராஜலட்சுமி கூறும்போது, “விஜய் பிரச்சாரத்தின்போது மின்சாரம் துண்டிக்க ப்படவில்லை. விஜய் வருவதற்கு முன்பு டிரான்ஸ்பார்மரிலும், மரத்திலும் சிலர் ஏறியதால் மின்சாரத்தை துண்டித்து, காவல் துறை மூலம் அவர்களை கீழே இறக்கிய பின்னர் மீண்டும் மின் விநியோகம் செய்யப்பட்டது” என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *