சென்னை, செப்.29- தமிழ்நாட்டின் தொல்குடி மின்னணு காப்பகமானது, அழியும் நிலையில் உள்ள மொழிகளுக்கான பாதுகாப்புத் (SPPEL) திட்டமாக செயல்படுகிறது. இந்தக் காப்பகம், கேர் கோட்பாடுகளை (Collective Benefit, Authority to control, Responsibility, Ethics – CARE) அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இதன்மூலம், பழங்குடியினர் சமூகங்களுக்கு, அவர்களின் பண்பாட்டு ஆவணங்களை பாதுகாக்க, பகிர மற்றும் மறுபயன்பாட்டில் முழு உரிமையும் வழங்கப்படுகிறது.
எதிர்கால தலைமுறையினருக்கு…
பழங்குடியின மக்களின் மொழி வளங்கள் மற்றும் பண்பாட்டு மரபுகளை ஆவணப்படுத்தி பாது காக்க ‘தொல்குடி மின்னணு காப்பகம்’ ஒன்றை தொடங்கியுள்ளது. சட்டப்பேரவை யின் 2024-2025 நிதிநிலை அறிக்கையில், பழங்குடியினர் மொழி மற்றும் ஒலி வடிவங் களை எதிர்கால தலைமுறையினருக்குப் பயன்படும் வகையில் இனவரைவியல் நோக்கில் ஆவணப்படுத்திப் பாதுகாக்கப் படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.2 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு பழங்குடியினர் மொழிகளை ஆவணப்படுத்துவதற் கான உரிய வழிமுறைகளை கண் டறிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் கடந்த 2024ஆம் ஆண்டு செப்.27, 28 தேதிகளில் “தமிழ்நாடு பழங் குடியினரின் கலாச்சாரத்தை பாதுகாத்தல் மற்றும் வளப்படுத்துதல்” என்ற தலைப் பில் தேசிய தொல்குடி மாநாடு ஆதிதி ராவிடர் நலத்துறை அமைச்சரின் தலை மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் புகழ்பெற்ற தேசிய கல்வி நிலையங்கள் மற்றும் ஆய்வு மையங்களில் பணிபுரியும் மொழியியல் மற்றும் கலாச்சார வல்லுநர் கள், பேராசிரியர்கள் பங்கேற்று, பழங்குடி யினர் மொழி பாதுகாப்பு குறித்து பரிந் துரைகளை வழங்கினர்.
புதிய தொழில்நுட்பங்கள்
இந்த மாநாட்டின் கருப்பொ ருளாக முன்வைக்கப்பட்ட அம்சங்கள் வருமாறு:
அழி வின் விளிம்பிலுள்ள பழங்குடி மொழிகள் மற்றும் பேச்சு மொழி மரபுகளை பாதுகாத் தல், அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடி மொழி சிறப்பு, கற்பித்தல் முறைமைகளை ஆராய்தல், அழிவின் விளிம்பிலுள்ள பழங் குடி மொழிகளை புதிய தொழில்நுட்பங்கள்
மூலம் புத்துயிரூட்டுதல், அழிந்து வரும் பழங்குடி மொழிகளை ஆவணப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்து வதற்கான திட்டங்கள், பழங்குடியினர் மக் களின் பேச்சு மற்றும் மொழிப் பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியவைகளாகும்.
இம்மாநாட்டின் தொடர்ச்சி யாக, பழங்குடியினரின் மொழி, கலாச்சாரம், பண் பாட்டை ஆவணப்படுத்தும் வகையில், பல்வேறு மொழியியல் மற்றும் கலாச்சார வல்லுநர்களிடமிருந்து பெறப்பட்ட கருத் துகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறையால் அமைக்கப்பட்ட மதிப்பீட்டுக் குழு ஆராய்ந்து பரிந்துரைத்தது. இதன்படி முதற்கட்டமாக காணிக்காரர், நரிக் குறவர், இருளர், தோடர் மற்றும் குரும்பர் ஆகிய பழங்குடியின மொழி, கலாச்சாரம், பண்பாட்டினை ஆவணப்படுத்த ஏதுவாக அர சால் அனுமதி வழங்கி உரிய வழிகாட்டு நெறி முறைகளுடன் ஆணை வெளியிடப்பட்டது.
தரவுகளை சேகரிக்க..
தரவுகளை சேகரிக்க வல்லுநர் குழு ஒன்றை அமைத்து, சேகரிக்கப்பட்ட தரவு களை ஒருங்கிணைத்து மின்னணு காப்பக மாக மாற்ற சென்னை சமூகப் பணி கல் லூரியில் உள்ள சமூகநீதி மற்றும் சமத்துவ மய்யம் தேர்வு செய்யப்பட்டது. இந்தத் தொல்குடி மின்னணு காப்பகம், பழங்குடி யினர் மொழிகளையும், கலாச்சாரங்களையும் பதிவு செய்து நீண்ட காலத்துக்கு பாது காப்பதற்கும் அவற்றை வருங்கால மக்களுக்கு பயிற்றுவிப்பதற்கான வாய்ப்பை உருவாக்குவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.
தொல்குடி மின்னணு காப்பகம்
இதன்படி தோடா சமூகத்தின் சடங்கு பாடல்கள், இருளர் சமூகத்தின் மருத்துவ மரபுகள், குறும்பா சமூகத்தின் கதை சொல்லும் ஓவியங்கள் மற்றும் காணிக்காரர் சமூகத்தின் சற்று பாட்டுஎன்னும் மரபுப்பாடல் கள் போன்றவை இந்த மின்னணு காப்பகத் தில் சேகரிக்கப்பட்டுள்ளன. இது தலைமுறை பரம்பரை கற்றல், மின்னணு கதை சொல் லல் மற்றும் பாடத்திட்ட மேம்பாடு ஆகியவை களுக்கான தளமாகவும் செயல்படுகிறது. இந்தத் தொல்குடி மின்னணு காப்பகம் (www.tholkudiin), a பழங்குடியினர் தினத்தன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச் சரால் பொதுப்பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டது.