மா.சுப்பிரமணியன்
கரூர் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்த போது, அதை அனுமதிக்க மறுத்து, தவெக தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆம்புலன்ஸை வழிமறித்து தவறான மன ஓட்டத்தை புகுத்தியவர் இபிஎஸ் எனவும், தவெக தொண்டர்களை இந்த மனநிலைக்கு மாற்றிய அவரே இதற்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும், இத்தகைய பேரிடரிலும் இபிஎஸ் அரசியல் செய்வதாகவும் விமர்சித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை… அமைச்சர் புதிய அறிவிப்பு
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு விரைவில் ரூ.1,000 வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஒட்டன்சத்திரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் நாட்டில் இதுவரை 20 லட்சம் புதிய ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 52 மாதங்களில் 3,000 ரேசன் கடைகள் பிரிக்கப்பட்டு முழுநேரம், பகுதிநேர கடைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.