குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் குரூப் 4 தேர்வு முடிவு அக்டோபர் 4வது வாரத்தில் வெளியிட நடவடிக்கை டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி

2 Min Read

சென்னை, செப். 29 குரூப் 2, 2ஏ தேர்வுக்கான முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படும். இதன் காலி பணியிடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் கூறினார். குரூப் 4 தேர்வு முடிவு அக்டோபர் 4வது வாரத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப்-2 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப்-2, 2ஏ பதவிகளில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை நேற்று (28.9.2025) நடத்தியது. தமிழ்நாடு முழுவதும் 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் தேர்வு எழுதினர்.

சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள பிரசி டென்சி ஷெர்வுட் ஹால் சீனியர் செகண்டரி பள்ளி மய்யத்தில் நடந்த குரூப் தேர்வை டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் 28.9.2025 அன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: டிஎன்பிஎஸ்சி ஓராண்டு கால அட்டவணையை அமைத்து அதன் அடிப்படையில் தொடர்ந்து தேர்வுகளை குறித்த நேரத்தில் நடத்தி வருகிறது. சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் இந்தாண்டுக்கான கால அட்டவணையை வெளியிட்டோம். அதில் 7 தேர்வுகள் இந்தாண்டு நடைபெறும் என்று குறிப்பிட்டு இருந்தோம். அதன் அடிப்படையில் இன்றுடன் சேர்த்து 6 தேர்வுகள் குறித்த காலத்தில் நடந்துள்ளது. இன்னும் நடக்க வேண்டிய ஒரு தேர்வுக்கும் அடுத்த 10 நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும்.

அத்துடன் இந்தாண்டு கால அட்டவணை முழுமையாக நிறைவு செய்யப்படும். இதுவரை தேர்வாணையம் கடந்த 13 தேர்வுகளை குறிப்பிட்ட, பெண்கள் கல்லூரி என 188 தேர்வு கூடங்களில் இந்த தேர்வு நடந்தது. சென்னையில் மட்டும் 53606 பேர் தேர்வு எழுதினர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடந்தது. எழுத்து தேர்வில் பொது அறிவியலில் 75 வினாக்களும், திறனறிவு தேர்வில் 25 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது.

வினாக்கள் அனைத்தும் ஆப்ஜெக் டிவ் வடிவில் இடம் பெற்றிருந்தது. ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப் பெண்கள் என மொத்தம் 300 மதிப் பெண்கள் வழங்கப்பட்டிருந்தது. தேர்வு எழுதுபவர்கள் தேர்வு நடைபெறும் நேரத்தில் இருந்து 1 மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு கூடங்களுக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால், காலை 7 மணி முதலே தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு வரத் தொடங்கினர்.

தேர்வு மய்யங்களுக்கு கைப்பேசி கால்குலேட்டர், கைக்கடி காரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வு நடைபெற்ற அனைத்து மய்யங் களிலும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் தேர்வு கூடங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. தேர்வில் முறைகேடுகளை தடுக்க டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர் களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.  குரூப் 2, குரூப் 2ஏ தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டமாக மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *