வல்லம், செப். 29- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தினம் கொண்டாடப்பட்டது.
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் செயல்படும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் 24.09.2025 அன்று நாட்டு நலப்பணித் திட்ட தினம் (NSS Day) மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்ட தினத்தை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் தூய்மைப் பணிகள் மற்றும் மரக் கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
அன்று மதியம் 3.00 மணியளவில் நாட்டு நலப்பணித் திட்ட தினம் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி தலைமையேற்று உரையாற்றினார். துணை முதல்வர் முனைவர் க.ரோஜா NSS தினக் கொண்டாட்டத்தின் அவசியத்தை எடுத்துரை த்தார். நாட்டு நலப்பணித் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பெ.மாதவன் விளக்கவுரை ஆற்றினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜி.செங்கொடி வரவேற் புரை நிகழ்த்தினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆர்.நடராஜன் நன்றியுரை ஆற்ற விழா இனிதே நிறைவுற்றது.