சென்னை, நவ.10 – குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல கீழ டுக்கு சுழற்சி காரணமா கவும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மயிலாடு துறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவ கங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல் வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந் துள்ளதை அடுத்து, தென் மாவட்டங்கள் மற்றும் வட தமிழ்நாடு கடலோர மாவட்டங்க ளில் பெரும்பாலான இடங்களிலும், வட உள் தமிழ்நாடு மாவட்டங்க ளில் அனேக இடங்களி லும், கனமழை பெய்துள் ளது. அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில் கீழ் கோத்தகிரி பகுதியில் 230 மிமீ மழை கொட்டித் தீர்த்துள்ளது.
சென்னை மற்றும் புற நகரில் அம்பத்தூர், குன் றத்தூர், பூந்தமல்லி, சத் தியபாமா பல்கலைக் கழ கம், பொன்னேரி மற்றும் சென்னை நகரில் சில இடங்களில் 10மிமீ மழை பெய்துள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.