தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் விழா பேரா மாநிலம், ஈப்போ மாநகரில் உள்ள உணவகத்தில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. பெரியார் பன்னாட்டு அமைப்பின் மலேசிய தலைவர் முனைவர் மு.கோவிந்தசாமி பெரியார் படத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். ஈப்போ பெரியார் தொண்டர் குழு தலைவர் மா. இலட்சுமணன் தலைமை தாங்கினார். முல்லைச் செல்வன் , கோபி , தாப்பா கெ.வாசு, தா.சி. முனியரசன் , முகமது அலி, கவிஞர் சா. சண்முகம், கவிஞர் முத்து பாண்டியன் ஆகியோர் உரையாற்றினார்கள். பெரியார் தொண்டர்கள், கழகத் தோழர்கள் , பெரியார் பாசறை தொண்டர்கள், மகளிர் மற்றும் பெரியார் சிந்தனையாளர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மூத்த தொண்டர்களுக்கு பயனாடை அணிவித்து பாராட்டப்பட்டது. 2029இல் பெரியார் மலாயா வருகையின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்று இந்த நிகழ்வில் கேட்டுக்கொள்ளப்பட்டது.