அமெரிக்காவின் வாசிங்டன் அருகில் உள்ள வர்ஜீனியா-சேண்டிலியில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் பெரியாருக்கான ஓட்டம் (“ரன் ஃபார் பெரியார்”) நிகழ்ச்சி தந்தை பெரியார் 147 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 28.9.2025 ஞாயிறு காலை 8 மணிக்கு வர்ஜினியா-சான்டிலி லிபர்ட்டி ஸ்கூல் அருகில் வேர்ல்ட் ட்ரையலில் அய்ந்து கிலோ மீட்டர் தூரம் ஓட்டம் நடைபெற்றது. பெரும்பாலான தமிழர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் ‘ரன் ஃபார் பெரியார்’ நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சியை பெரியார் பன்னாட்டு அமைப்பைச் சேர்ந்த அறிவு பொன்னி, எழில் வடிவன், கலைவாணன் ஒருங்கிணைத்தனர். நிகழ்வில் மேனாள் வாசிங்டன் வட்டார தமிழ் சங்கத் தலைவர் அறிவுமணி, பெஸ்ட் ரன்னர் அமைப்பைச் சேர்ந்த புண்ணியராஜ், சென்னை எக்ஸ்பிரஸ் குமரன், நோவா நண்பர்கள் அன்புமணி, பன்னீர், விகாஷ், ஸ்டாலின், அழகர், தியாகு, ராமு மகளிர் அமைப்பைச் சேர்ந்த பிரீத்தி, மேரி, பொன்முடி, கனிமொழி, சுபாஷினி, சினேகா, தமிழ் பள்ளியின் சார்பில் கிஷோர் சிங், குமார், கமலபாரதி, சண்முகம், கோபால், ஜெயராஜ் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். ‘பெரியார் உலகமயம் ஆகிறார்’ என்பதற்கு அடையாளமாக இந்த நிகழ்ச்சி அமைந்தது. முன்னதாக தமிழ்நாட்டின் கரூரில் கூட்ட நெரிசலில் இறந்து போன அப்பாவி மக்கள் 41 பேர்களுக்காக இரங்கல் தெரிவிக்கப்பட்டது. எழில் வடிவன், கலைவாணன் வரவேற்புரை ஆற்றினார். அறிவுப் பொன்னி சந்திரசேகரன் நன்றி கூறினார்.