பதினெண் பாடை

1 Min Read

அங்கம், வங்கம், கலிங்கம், கௌசிகம், 

சிந்து, சோனகம், திரவிடம், சிங்களம், 

மகதம், கோசலம், மராடம், கொங்கணம், 

துளுவம், சாவகம், சீனம், காம்போசம், 

அருணம், பப்பரம் எனப் பதினெண் பாடை. (162)

இவற்றுள் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் தோன்றிய திவாகரமே இன்று கிடைக்கும் நிகண்டுகளுள் பழமையானதாகும். இதனை வரலாற்று ஆராய்ச்சியாளர் கி.பி.9ஆம் நூற்றாண்டினைச் சார்ந்தது என்றே பெரிதும் தீர்மானிக்கின்றனர். திவாகரர் சமண முனிவர் என்றும் சைவப் பெரியார் என்றும் இரு வேறு கூற்றுக்கள் உள்ளன. கி.பி. 1839இல் தாண்டவராய முதலியார் அவர்களே பழைய ஏட்டுச் சுவடிகளிலிருந்து முதல் பத்துத் தொகுதிகளைக் கொண்ட திவாகர நிகண்டினைப் பதிப்பித்தார். அடுத்த ஆண்டில் (கி.பி. 1840இல்) எஞ்சிய இரண்டு தொகுதிகளுடன் சேர்த்து அவரைப் பின்பற்றி இராமசாமிப்பிள்ளை பதிப்பித்தார்.

அதன் பின்னர் பலர் திவாகரத்தை முழுமையாகவும் சில சில பிரிவுகளை மட்டும் பதிப்பித்து வந்துள்ளனர். அண்மையில் சென்னைப் பல்கலைக்கழகம் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. திவாகரரை ஆதரித்த வள்ளல் சேந்தன் பெயரையும் சேர்த்து இந்நூல் ‘சேந்தன் திவாகரம்’ என்றும் பெயர் பெற்றுள்ளது. கி.பி. 1839, 1840இல் வெளிவந்த தாண்டவராயப் பிள்ளை அவர்களின் பதிப்பையே இத் திவாகரப் பதிப்பு ஆதாரமாகக் கொண்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *