சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு: கோரிக்கை மனுக்களை அளித்தனர்

சென்னை, செப். 28–   சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று (27.9.2025) காலை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேசினர். அப்போது தொகுதி சார்ந்த கோரிக்கை மனுக்களை அளித்தனர். திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் கடந்த 23ஆம் தேதி நடந்தது.

இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை தொடர்ச்சியாக சந்தித்து, அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும், அமைச்சர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பி னர்கள், தொகுதி பார்வையாளர்கள் ஒருங்கிணைந்து கட்சி பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அறிக்கை தர வேண்டும்

நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களை தவிர்த்து, குறைந்தது வாரத்தில் 4 நாட்கள் தங்கள் தொகுதியில் தங்கி மக்களை சந்தித்து, அவர்களுக்கான தேவையான பணிகளை செய்திட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், தங்கள் தொகுதியில் ஆற்றிய மக்கள் பணிகள், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு மக்களின் நலனை காத்திடும் வகையில் எடுத்துரைத்த கருத்துகள் ஆகியவை பற்றிய அறிக்கையை 15 நாட்களுக்கு ஒருமுறை தனக்கு அளித்திட வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (27.9.2025) காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். அப்போது விஜய் வசந்த், ஜோதி மணி, விஷ்ணு பிரசாத், கோபிநாத், ராபர்ட் புரூஸ், சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உடன் இருந்தார். அப்போது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய தொகுதி சார்ந்த கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ெதாகுதியில் தங்கி மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான பணிகளை செய்ய வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து திமுக கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று அப்போது வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி உடன் இருந்தார். தொடர்ந்து திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *