காரைக்குடி, செப். 28– தந்தைபெரியாரின் 147ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் கல்லூரி மாணவர் களுக்கான பேச்சுப் போட்டி நடத்துவது குறித்த காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 21-09-2025 அன்று காரைக்குடி குறள் அரங்கில் நடைபெற்றது.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் பேச்சுப் போட்டியினை நடத்து வது குறித்த முதல் திட்டமிடல் கூட்டமானது இணைய வழியில் 14.09.2025, ஞாயிறு இரவு 8.30 மணியளவில் பகுத்தறிவாளர் கழக மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு மட்டும் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக அனைத்து தோழர்களின் ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் பெறும் வகையில் இரண்டாம் கட்டமாக திட்டமிடல் கூட்டமானது 21.09.2025 அன்று காலை 11.00 மணியளவில் காரைக்குடி குறள் அரங்கத்தில் காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் செல்வம் முடியரசன் தலைமையில், பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் ந. செல்வராசன் வரவேற்புரையுடன் தொடங்கியது.
இக்கூட்டமானது மாவட்ட கழக காப்பாளர் சாமி.திராவிடமணி, மாவட்ட கழக தலைவர் ம.கு. வைகறை, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரசு பிராட்லா, மாவட்ட ப.க.துணைத் தலைவர், அ.அரவரசன், மாவட்ட ப.க.துணைத் தலைவர் செ.கோபால்சாமி, காரைக்குடி மாநகரத் தலைவர் ந. ஜெகதீசன், காரைக்குடி மாநகர துணைத் தலைவர் பழனிவேல்ராசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் கல்லூரி மாணவர்களுக்கான இப்பேச்சுப் போட்டியினை கடந்த ஆண்டுகளில் நடத்தியதை விட வெகு சிறப்பாக நடத்துவ தற்கு எடுக்க வேண்டிய முன்முயற்சிகள் குறித்தும் எவ்வா றெல்லாம் பொறுப்புகளை பிரித்து செயல்பட வேண்டும் எனவும் அவர்தம் கருத்துகளை ஒவ்வொருவராக பகிர்ந்து கொண்டனர்.
நோக்க உரையாற்றிய மாநில அமைப்பாளர் ஒ. முத்துக்குமார், கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தினையும், தலைமைக் கழகத்தின் அறிவிப்புகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
கருத்துரையாற்றிய பகுத்தறி வாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் முனைவர் மு.சு. கண்மணி பேச்சுப் போட்டியை நடத்துவதற்கு நாம் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து விளக்கினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியினை 12.10.2025, ஞாயிறு காலை 9.00 மணிக்கு வெகு சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
மூன்று பரிசுத் தொகையும், நினைவுப் பரிசும், அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்குவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுத்தொகை யாக முதல் பரிசு ரூ. 3000/- இரண்டாம் பரிசு ரூ. 2000/- மூன்றாம் பரிசு 1000/- வழங்குவது எனவும் அப்பரிசுத் தொகையினை காரைக்குடி பெரியார் சாக்ரடீசு நினைவுப் பரிசாக மாவட்டக் காப்பாளர் சாமி திராவிடமணி வழங்குவது எனவும்
பேச்சுப் போட்டிகள் முடிந்த பிறகு மற்றொரு நாளில் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பள்ளி மாண வர்களுக்கான வினா-விடை போட்டிகளை பள்ளியளவில் நடத்துவது எனவும் அதற்கான மொத்த பரிசுத் தொகையினையும் கழகப் பேச்சாளர் தி. என்னாரசு பிராட்லா வழங்குவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான நினைவுப் பரிசினை பக மாநில துணைப் பொதுச் செயலாளர் முனைவர் மு.சு. கண்மணி வழங்குவதாகவும்
வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களை பக மாவட்ட துணைச் செயலாளர் இரா. முத்துலெட்சமி வழங்குவதாகவும், வெற்றிபெற்றவர்களுக்கு புத்தகப் பரிசுகளையும், நடுவர்களுக்கான செலவுகளை பக மாவட்டத் தலைவர் செல்வம் முடியரசன் ஏற்றுக்கொள்வதாகவும்
பிளக்ஸ், படிவங்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை பக மாநில அமைப்பாளர் ஒ. முத்துக்குமார் செய்து தருவது எனவும், ஒளிபெருக்கி வசதிகளை பக மாவட்ட துணைத் தலை வர் செ. கோபால்சாமி செய்து தருவதாகவும், அரங்கம், அனைவருக்கும் தேநீர், பிஸ்கட் மற்றும் இதர செலவினங்களை பக மாவட்டச் செயலாளர் ந. செல்வ ராசன் ஏற்றுக் கொள்வதாகவும், திராவிடர் கழக காரைக்குடி மாநகரத் தலைவர் ந. ஜெகதீசன், காரைக்குடி மாநகர துணைத் தலைவர் பழனிவேல்ராசன் ஆகியோர் நிதியுதவி செய்வதா கவும் அறிவிக்கப்பட்டு தீர்மா னம் நிறைவேற்றப்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
நிகழ்வின் இறுதியாக பக மாவட்ட துணைச் செயலாளர் இரா. முத்துலெட்மி நன்றியுரை யாற்றினார்.