தூத்துக்குடி, செப். 28– தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் சார்பி லான 43ஆவது கூட்டம் மஞ்சை வசந்தன் எழுதி யுள்ள ‘அர்த்தமற்ற இந்து மதம்’ புத்தக அறிமுக உரை யாக நடைபெற்றது.
14.9.2025 அன்று மாலை 6 மணிக்கு பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கில் தி.மு.க. இலக்கிய அணி மாவட்டத் துணைச் செயலாளர் மோ.அன்பழகன் தலைமையில், உலகத் திருக்குறள் பேரவைத் துணைச் செயலாளர் பாவலர் கோ.இளமுருகு வரவேற்புரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. மாவட்ட கழகத் தலைவர் மு.முனியசாமி முன்னிலை வகித்து உரையாற்றினார்.
அடுத்து ‘அர்த்தமற்ற இந்துமதம்’ புத்தக அறிமுக உரையினைப் பகுத்தறிவாளர் கழகத் தோழர் சீ.மனோகரன் தொடங்கினார். சில உயிரற்ற பொருட்கள், ஒரு குறிப்பிட்ட சூழலில், தட்பவெப்ப நிலையில் சூரிய ஒளியின் உதவியால் ஒன்றிணைந்த போது அதற்கு உயிர்ப்பு ஏற்பட்டு அசையத் தொடங்குகிறது. அவ்வாறே உயிரிகள் தோன்றின என கூறி உரையை நிறைவு செய்தார். உண்மை வாசகர் வட்டச் செயலாளர் மா.பால்ராசேந்திரம் நிறை வுரையாற்றினார்.
இறுதியாக மாவட்ட கழக துணைச் செயலாளர் செ.செல்லத்துரை நன்றி கூறினார். இந்நிகழ்வினை மாவட்ட ப.க. செயலாளர், சொ.பொன்ராஜ் ஒருங்கிணைத்தார். கி.கோபால்சாமி, பொ.போஸ், சுபாஷ், அ.பார்த்த சாரதி, உலகநாதன், இராமச் சந்திரன், கண்ணன், வழக்குரைஞரணி மாவட்டச் செயலாளர் இ.ஞா.திரவியம் ஆகியோர் கலந்து கொண்டு கருத் தினைக் கேட்டனர்.