புதுச்சேரி, செப். 28– தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாள் விழா புதுச்சேரி மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாலை அணிவித்தல், உறுதி மொழி ஏற்றல், கொடியேற்றுதல், இனிப்பு வழங்கல், நண்பகல் உணவு வழங்கல் என விழா இனிதே நடைபெற்றது.
17-09-2025 காலை 10.00 மணியளவில் புதுச்சேரி பிள்ளைத் தோட்டத்தில் உள்ள தந்தை பெரியார் சதுக்கத்திற்கு மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி தலைமையில் ஊர்வலமாகச் சென்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
மாவட்டத் தலைவர் வே.அன்பரசன், செயலாளர் தி.இராசா ஆகியோர் முன்னிலையில் காப்பாளர் இர.இராசு சமூக நீதி நாள் உறுதி மொழி கூற கழகத் தோழர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். மகளிரணிச் சார்பில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று கதிர்காமம், பெரியார் நகர், திலாஸ்பேட்டை, மூலைக்குளம், சேதராப்பட்டு, இராசா நகர் பெரியார் படிப்பகம் ஆகிய பகுதிகளில் கொடி ஏற்றியும், மாலை அணிவித்தும், உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஆங்காங்கே இனிப்பு, தேநீர், சமுசா, பழச்சாறு ஆகியவை மக்களுக்கு வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட கழகக் காப்பாளர் இரா. சடகோபன், பொதுக்குழு உறுப்பினர்கள் விலாசினிராசு, லோ.பழனி, கி. அறிவழகன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைப் பொதுச் செயலாளர் வி.இளவரசி சங்கர், துணைத் தலைவர் மு.குப்புசாமி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன், செயலாளர் ஆ.சிவராசன், தொழிலாளரணித் தலைவர் வீர. இளங்கோவன், செயலாளர் கே. குமார், நகராட்சி மற்றும் கொம்யூன் கழகப் பொறுப்பாளர்கள் மு.ஆறுமுகம், களஞ்சியம் வெங்கடேசன், சு.துளசிராமன், செ.இளங்கோவன், இரா.ஆதிநாராயணன், இராம.சேகர், இரா.சுந்தர், இரா.திருநாவுக்கரசு, முகமது நிசாம், வை.சண்முகம், கா.நா.முத்துவேல், இ.சிவக்குமார், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ.நடராசன், பா. குமரன், இரா. சத்யராஜ், மகளிரணித் தலைவர் அ.எழிலரசி, சி.சிவகாமி, தி.விஜயா, சு.கல்பனா, சுகுணா, தெ. தியாகு, பெ.ஆதிநாராயணன், இரா. சீனுவாசன், செ.தர்மலிங்கம், மா.மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அரசு மற்றும் பல்வேறு கட்சிகள், சமூக இயக்கங்கள் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
திலாசுப் பேட்டை
புதுச்சேரி, திலாசுப் பேட்டையில் அமைந்துள்ள கழகக் காப்பாளர் இர.இராசு இல்லத்தில் வழக்கமான உற்சாகத்துடன் பெரியார் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
முன்னதாக தோழர்களின் பலத்த முழக்கத்துடன் மாவட்டத் தலைவர் வே.அன்பரசன் திராவிடர் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ.நடராசன் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார். அனைவருக்கும் மோர் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. கழகப் பொதுக்குழு உறுப்பினர் விலாசினி ராசு வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
மூலைக்குளம்
தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் அன்று – 17.09.2025 நண்பகல் 12.00 மணியளவில் புதுச்சேரி மூலைக்குளத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்டத் தலைவர் வே.அன்பரசன் தலைமையில் காப்பாளர் இரா.சடகோபன் மாலை அணிவித்தார். மாவட்டச் செயலாளர் தி.இராசா முன்னிலையில் தோழர் இரா.சீனுவாசன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பழச்சாறு வழங்கி சிறப்பித்தார்.
இராசா நகர்
புதுச்சேரி, இராசா நகர், பெரியார் படிப்பகத்தில் அமைந்துள்ள தமிழர் தலைவர் கி.வீரமணி ஆய்வு நூலகத்தில் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
முன்னதாக இரா.திருநாவுக்கரசுவின் தானி (ஆட்டோ) கழகக் கொடியுடன் முன்பக்கம் செல்ல அதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் சென்ற தோழர்கள் அனைவரும் நண்பகல் ஒரு மணியளவில் பெரியார் படிப்பகத்தில் ஒன்று கூடினர்.
மாவட்டத் தலைவர் வே. அன்பரசன் பெரியார் படிப்பகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். மாவட்டச் செயலாளர் தி.இராசா கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். தொழிலாளரணித் தலைவர் வீர. இளங்கோவன் உறுதி மொழியினை வாசிக்க அனைவரும் உறுதி ஏற்றுக் கொண்டனர்.
அனைவருக்கும் புலால் உணவுகள் வழங்கப்பட்டன. மகிழ்வுடன் அய்யா பிறந்தநாள் விழா நிறைவு பெற்றது. காலையில் இருந்து அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மாவட்டத் துணைத் தலைவர் மு.குப்புசாமி நன்றி தெரிவித்தார். பெரியார் பிறந்தநாள் சுவரொட்டி மாநகர் முழுவதும் ஒட்டி உள்ளது மிகவும் சிறப்பாக அமைந்தது.