‘என்ன வேலை பாக்குறப்பா?’ என்று ஒருவரை கேட்கும் போதும் அல்லது உன் பையன் என்ன வேலை பார்க்கிறான்? என்று கேட்கும் போதும் விவசாயம்தான் பார்க்கிறான் செய்கிறான் என்று தயக்கமான ஒரு பதில் வரும். வயிற்றுப் பசிக்கு உணவு அளிக்கும் உன்னதமான ஓர் உயர்வான சமுதாயத் தொழிலை கேவலமாக எண்ணக்கூடிய மனநிலையை இந்த சமுதாயம் மாற்றி விட்டு இருக்கிறது. அதனால் விவசாய தொழில் என்று சொல்லும் போது சலிப்புடன் சொல்லக்கூடிய நிலையை காண முடிகிறது. திமுக பொதுச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பெற விண்ணப்பம் அளிக்க வந்த ஒரு பெண்ணிடம் ‘என்ன வேலை செய்றீங்க?’ என்று கேட்டதற்கு அவர்கள் அளித்த பதில் ஹவுஸ் வைஃப் House Wifeதான் என்று அளித்த பதில் விவசாயம்தான் என்ற பதிலோடு முற்றிலும் ஒத்து போவதை பார்க்க முடிகிறது. தன் வேலை மற்றும் தொழில் அங்கீகாரம் பற்றிய மதிப்பிழந்த உணர்வு சமூகத்தால் அவர்களுக்கு காலம் காலமாக ஊட்டப்பட்டு இருக்கிறது.
சமூக நீதியை ஆழப்படுத்த, அகலப்படுத்த தி.மு.க. 1000 ரூபாய் மகளிருக்கான உரிமை தொகை என்று அறிவித்த தேர்தல் வாக்குறுதி பெண்களின் வீடு சார் உழைப்பையும் அதன் அங்கீகாரம் குறித்த சர்ச்சைகளையும் விவாத பொருளாக ஆக்கி உள்ளது. ரஷ்யப் பெண்கள் அமெரிக்கப் பெண்களை விட முன்னேற்றம் அடைந்திருப்பதற்கு காரணம் ரஷ்யப் புரட்சிக்கு பின்னர் வீடு சார் பணிகள் சமூகமயமாக்கப்பட்டதுதான். அதற்கான களசூழல் குழந்தைகள் காப்பகம், மலிவு விலை உணவகங்கள், மலிவு விலை சலவையகங்கள் அதிக அளவில் உருவாக்கப்பட்டதுதான் காரணம். அதேபோல நம் தமிழ்நாட்டுப் பெண்களும் இந்தத் திட்டத்தின் மூலம் சிறந்த முன்னேற்றத்தை அடைந்து வருகிறார்கள். சமீபத்தில் நடந்த உலக பெண்கள் தின விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘பெண்களை வார்த்தைகளில் போற்றுவதை விட வாழ்க்கையில் மாற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டுப் பேசியது அனைவரையும் உற்சாகப்படுத்தியது.
இப்படி பல்வேறு எழுச்சி கருத்துகளை அருமையாக மணியம்மையார் 103ஆம் பிறந்தநாள் விழாவில் வட சென்னையின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் தோழர் உ வாசகி Housewife என்பதன் மதிப்பு என்ன என்ற தலைப்பில் பேசி உள்ளார். அவரின் புரட்சிகரமான முழு பேச்சையும் கேட்க Periyar Vision OTT யை இன்றே பாருங்கள்
L வெங்கடேஸ்வரி
திருவெற்றியூர், சென்னை
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com