சென்னை, செப்.27- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.11/2025, நாள் 15.07.2025இன் வாயிலாக நேரடி நியமனத் திற்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப்- 2 மற்றும் குரூப்-2ஏஇல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறிவகை (OMR) தேர்வு நாளை (28.09.2025) முற்பகல் நடைபெற உள்ளது.
இத்தேர்வினை 5,53,634 (பொதுத் தமிழை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தவர்களின் எண்ணிக்கை 4,47,421 மற்றும் பொது ஆங்கிலத்தை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தவர்களின் எண்ணிக்கை 1,06,213) தேர்வர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 1,905 தேர்வுக் கூடங்களில் எழுதவுள்ளனர்.