ஒரு தவறான கருத்து

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காப்பதற்கு இந்தியாவை ஒரே ஒரு மொழி பேசும் நாடாக மாற்றுவது அவசியம் என்று ஹிந்தி வெறியர்கள் கருதுகின்றனர்.

ஆனால் இராபர்ட் டி.கிங் சுட்டி காட்டியுள்ளது போன்று, ஒரு பொது மொழியின் மூலம் மற்றவர்களுடன்தொடர்பு கொள்ளலாம் என்பது சிக்கல்கள் மறைந்து விடுவதற்கோ அல்லது சிக்கல்கள் எளிதாக தீர்க்கப்பட்டு விடுவதற்கோ உத்தரவாதம்  ஆகாது.

ஒரே குடும்பத்தில் இருப்பவர் களுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகளும், அடிதடி சண்டைகளும் தோன்றுகின்றன. ஒரே மொழி பேசும் நாடுகளிலும் உள்நாட்டுப் போர்கள் நடைெபறுகின்றன என்பதை இந்தி வெறியர்கள் மறந்து விடுகின்றனர். Robert D King of cit P32

இரண்டாவதாக ஒரே மொழி பேசும் மக்களும் அரசியல் மற்றும் சித்தாந்தங்களின் அடிப்படையில் பல நாடுகளாக பிரித்துள்ளனர்.

எடுத்துக்காட்டாக அரபு மொழிதான் அரபு நாடுகளில் ஆட்சி மொழியாக உள்ளது. ஆனால், அவைகள் இணையாண்மையுள்ள தனித்தனி நாடுகளாக உள்ளன.

இசுபானிய (ஸ்பானிஸ்) மொழிதான் தென் அமெரிக்காவின்  சில நாடுகளில் ஆட்சி மொழியாக உள்ளது. ஆனால் அவைகள் தனித்தனியான சுதந்திர நாடுகளாக உள்ளன.

செர்மானிய மொழிதான் செர்மனிக்கும் ஆத்திரியாவுக்கும் (ஆஸ்திரியா) ஆட்சி மொழியாக உள்ளது. ஆனால், அவை இரண்டும் பல்லாண்டுகளாகவே தனி நாடுகளாக உள்ளன.

கொரிய மொழிதான் வடகொரியா விற்கும், தென்கொரியாவிற்கும் ஆட்சிமொழியாக உள்ளது. ஆனால், அவை இரண்டும் தனி நாடுகளாக பிரிந்துள்ளன.

மேலும், சுதந்திர இந்தியாவிற்குள் மாநிலங்கள் உருவாக்கப்பட்ட விதத்தையும் இங்கே குறிப்பிடலாம். உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், இராசத்தான் (இராஜஸ்தான்), அரியானா ஆகியவை இந்தி மொழியை தங்கள் மாநில அரசின் ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனாலும் அவை தனித்தனி மாநிலங்களாதான் உள்ளன.

1956இல் மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் திருத்தி அமைக்கப்பட்ட போது, ஹிந்தி பேசும் இந்த மாநிலங்களையெல்லாம் ஒன்றாக இணைத்து ஹிந்தி பேசும் ஒரே மாநிலமாக அமைக்க வேண்டும் என்று எவரும் சிந்தித்துக்கூடப் பார்க்கவில்லை.

மேலும் 2000ஆம் ஆண்டு நவம்பரில் இந்தி பேசும் மத்திய பிரதேசத்திலிருந்து, இந்தி பேசும் இன்னொரு மாநிலமாக சட்டீசுகரும், அதைப் போலவே பீகாரிலிருந்து சார்கண்டும், உத்தரப் பிரதேசத்திலிருந்து உத்தராஞ்சலும் பிரிக்கப்பட்டது.

மொழி மட்டுமே மக்களை ஒன்றிணைக்க முடியாது என்பதையே இவையெல்லாம் எடுத்துக் காட்டுகின்றன.

இன்னும் இருக்கிறது.

‘‘இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு’’ இரண்டாம் பாகம் ப:794 பேராசிரியர் அ.இராமசாமி முதல் பதிப்பு: 2023.

தகவல்: க.பழநிசாமி

தெ.புதுப்பட்டி – 624 705

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *