மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி
பத்தாம் நூற்றாண்டில் வேணாடு, புகழ் வாய்ந்த மன்னர் மார்த்தாண்ட வர்மரால் சிறப்பான ஆட்சி நடந்தது. கீழ் ஜாதியென்றும், சூத்திரர்கள் என்றும் முத்திரைக் குத்தப்பட்ட ‘களரி’ ஆசிரியர்கள் பாதுகாப்போடும், வழிகாட்டுதலோடும் மார்த்தாண்ட வர்மர் ஆட்சி நடந்ததால் நம்பூதிரி பிராமணர்கள் அதிகாரம் செலுத்த முடியவில்லை. அவர்கள் வேணாட்டிற்கு வடக்கேயே கட்டுப்படுத்தப்பட்டனர். வேணாட்டில் அவர்கள் ஆட்சி, அதிகாரம் செலுத்த முடியாமல் கடுப்பில் இருந்தனர் மன்னருக்கு எதிராக டச்சுக்காரர்கள் சதி ஒரு புறம். இந்த நிலையில் திடீரென 1758 ஆண்டு மன்னர் மர்மமாக கொலை செய்யப்பட்டார். அவர் மரணமடைந்த உடனே நம்பூதிரி பார்ப்பனர்கள் கை உயர்ந்தது.
மார்த்தாண்ட வர்மருக்குப் பின் கார்த்திகைத் திருநாள் இராம வர்மன் ஆட்சியில் அமர்ந்தார். இவர் காலம் 1758 முதல் 1798ஆம் ஆண்டு வரை 40 ஆண்டு ஆட்சி ! நம்பூதிரி -நாயர் கூட்டணி ஆட்சியாக திருவாங்கூர் மாறியது. இவர் காலத்தில் தான். கல் குளத்திலிருந்து, தலை நகர் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. வேணாடு”திருவாங்கூர்” எனப் பதிவு செய்யப்பட்டது. மன்னர் இராமவர்மன் நம்பூதிரிகளின் கைப்பாவையாகவே செயல் பட்டார். அப்பொழுது நாயர்கள் சிறந்த போராளிகளாக இருந்ததால் சமஸ்தானத்து படையில் பெரும்பாலும் போர் வீரர்களாக அவர்களே இருந்தனர். நாடார்கள் ‘களரி’ ஆசிரியர்கள் மார்த்தாண்ட வர்மர் ஆட்சிக்குப் பின் அதிகார மய்யங்களிலிருந்து அப்புறப் படுத்தப் பட்டனர். அந்த இடங்களிலெல்லாம் நம்பூதிர்கள் ஆட்சியாளர்களாக அமர்த்தப்பட்டனர். அரசரும், அரசாங்கமும் நம்பூதிரிகள் சொற்படி நடத்தப் பட்டது.
நம்பூதிரிகள் நாளடைவில் சொல்வதுதான் சட்டமாக ஆனது. ஜாதிய கொடுமைகளும், ஜாதிய கூட்டங்களாலும் கடுமையாக சட்டம் விதிக்கப்பட்ட காலமாக அது மாறிப்போனது நம்பூதிரிகள் பெரும் நிலக்கிழார்களாக மாறினர். மற்ற ஜாதிக்காரர்கள் அடிமைகள் போல் மாற்றப்பட்டனர். பெண்களுக்கு வரலாற்றில் நடக்காத கொடுமைகள் இழைக்கப்பட்டன. நாட்டில் நம்பூதிரிகள் வார்த்தைகளே சட்டங்களாயின.
மன்னர் அவர்கள் சொற்களுக்கு ஆடும் ெபாம்மை போல் இருந்தார். நம்பூதிரி -நாயர் கூட்டணி, திருவாங்கூரின் முழு அதிகார மய்யமாக மாறிப் போனது.
நம்பூதிரிகள் மொழியான சமஸ்கிருதத்தை நாட்டில் புகுத்தி, மலை யாள மொழியில் பெரும் கலப்பைச் செய்தனர். தமிழ் முழுமையாக அழிக்கப் பட்டது. தமிழ் கடவுள்கள் நாடு கடத்தப் பட்டனர். நாட்டுத் தெய்வங்கள் எல்லாம் போய் நம்பூதிரி பார்ப்பனர்கள் தெய்வங்கள் அந்த இடங்களில் குடியேறின. தமிழ் இலக்கியங்கள், தமிழ் பண்பாடு, வாழ்வியல் எல்லாமே மாறின. இப்படி நிகழ்த்தப்பட்ட மாற்றங்கள் அனை த்திற்கும் மன்னரும் தலையாட்டினார்.
நம்பூதிரி பார்ப்பனர்கள் அவருக்கு “தர்ம ராஜா” என்று பட்டப் பெயர் கொடுத்து மகிழ்ந்தனர். குப்தர்கள் ஆட்சி எப்படி பார்ப்பனர்களுக்கு பொற்காலமாக ஆனதோ, அதே போல் இராமவர்மர் ஆட்சி “தர்மராஜா” ஆட்சியாக நம்பூதிரி பார்ப்பனர்களுக்கு ஆகிப்போனது. மூவேந்தர்களான சேரர், சோழர், பாண்டியர் ஆண்ட தமிழ் நிலத்தில் சேரநாடு என்ற சேரர்கள் என்ற தமிழ் மன்னர்கள் ஆண்ட நிலம் வேணாடு, ஆய் நாடு என்று முதலில் மாறி, பிறகு திருவாங்கூர் என்று ‘‘கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்த’’ கதையாக நம்பூதிரிகள் நாடாக மாறிப் போன வரலாறுதான் இந்த வரலாறு. பரசுராமன் வழங்கிய நாடாக நம்பூதிரிகளுக்குத்தான் அந்த நாட்டின் உரிமை என்று அவர்களால் அவிழ்த்து விடப்பட்ட கட்டுக் கதைகளை மன்னர்களும் நம்ப வைக்கப்பட்டனர். (‘‘நம்பூதிரிகள் என்றால் ‘‘கற்றறிந்தவர்கள்”, “அறிவாளிகள்’’ என்று பொருள்) “கேரளோற்பத்தி’’ (கேரளம் உண்டான விதம்) என்ற புராணம், இங்கு குடியேறிய பார்ப்பனர்களுக்கு ‘‘நம்பூதிரி” என்ற பெயரை, பரசுராமன்தான் வழங்கியதாக குறிப்பிடுகிறதாம். மேலும் அந்தப் புராணப்படி, நம்பூதிரி பார்ப்பனர்கள் ‘பூதேவர்களாம்! மற்ற அனைத்து ஜாதியினரும் பூதேவர்களான நம்பூதிரிகளுக்கு பணியாற்றுவதே முதற் கடமையாகக் கொள்ள வேண்டும்.
நாயர்கள் கோயில்களில் பணியாற்றும் உரிமைப்பெற்றவர்கள். நாயர்கள் நில உைடமையாளர்கள், அடி மட்ட சூத்திரர்கள் வீட்டுப் பெண்கள் தேவலோகத்து ‘அப்ஸரஸ்கள்’ வழித்தோன்றல் – களாம். பூதேவர்களான நம்பூதிரிகளோடு, பாலுறவு கொண்டு அவர்களை மகிழ்விப்பது இந்த அப்ஸரஸ்களின் கடமை, அதுவே பெருமைக்குரியது என்று” கேரள மகாத்மியம்” என்ற புராணத்தில் எழுதப் பட்டுள்ளதாம். இவற்றைமெல்லாம் கூறி, மன்னர்களின் மதி மயங்கச் செய்து, நம்பூதிரிகள் ஜாதியக் கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டனர் இராமவர்மர் காலத்தில் ஆரம்பித்த இந்தக் கொடுமைகள் மற்ற திருவாங்கூர் மன்னர்கள் காலத்திலும் தொடர்ந்தன. 1817 வரை திருவாங்கூர் நாடு தன்னாட்சியுடன் முடியாட்சி அரசாக இருந்தது. 1818 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியா கொண்டு வந்த “இந்திய துணைப் படைத் திட்டத்தின் ‘‘கீழ் ஆங்கிலேய அரசுக்கு ஆண்டு தோறும் கப்பம் கட்டும் சமஸ்தானமாகிப் போனது.
(Ref :- A History of Kerala.
-R G Alexander: “Monemental remanis of Dutch East India”.
– world statesmen – Indian Princely States.
திருவாங்கூர் மன்னர்களும், நட்சத்திர பெயர்களும்
திருவாங்கூர் மன்னர்கள் ஒரு அதிகார தனிப்பெயருடன் அவர்கள் பிறந்த ‘‘நட்சத்திரம் அல்லது திருநாள் “உடன் தொடர்புைடய பெயரையும் வைத்துக் கொள்ளும் வழக்கம் நிலவியது. எடுத்துக்காட்டாக அரசர் இராமவர்மா, அவர் பிறந்த நட்சத்திரத்தோடு சேர்த்து”சுவாத்தி திரு நாள் இராமவர்மா என்று அழைக்கப்பட்டார். நம்பூதிரி பார்ப்பனர்கள் ஆதிக்கத்தில், நட்சத்திரத்தில் பிறந்த நாளை ஜாதக நம்பிக்கையின் அடிப்படையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது பல அரசர்கள் பெயர்கள் ஒரேபெயராக இருந்ததால், வேறுபாடு தெரிய அரசர்கள் பெயர்கள், பிறந்த நட்சத்திரங்கள் பெயர்களோடு இணைத்து அழைக்கப்பட்டது இப்படி பிறந்த நட்சத்திரங்கள் பெயர்களால் அழைக்கப்பட்டது திருவாங்கூர் அரசக் குடும்பத்தின் தனித்துவ அைடயாளமாக மாறிப் போனது – அதுவே வழமையாகவும் மாறிப் போனது. அந்நாட்டின் பாரம்பரியமாகவும் மாறிப்போனது நம்பூதிரி பார்ப்பனர்களின் ஆளுமையும், அரசர்களையும், ‘ஜாதகம்’ என்ற பெயரில் தங்களின் விருப்பத்திற்கேற்ப ஆட்டுவித்ததையும் காட்டுகிறது.( -விக்கிப்பீடியா)
திருவாங்கூர் அரசர்கள் தங்கள் பிறந்த நட்சத்திர பெயர்களால் அழைக்கப்பட்டாலும், அதற்கு முன் பட்டப்பெயராக, ‘‘பத்ம நாபதாசர்’’ என்றும் சேர்த்துக் கொண்டனர். கி.பி. 1750 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் மன்னர் அனிசம் திருநாள் நாட்டை ‘பத்மநாத சாமியிடம்’ ஒப்படைத்து எழுதிக் கொடுத்து விட்டார். ( அதனால் தான் அது, கடவுளின் தேசம்” (Gods own country) என்றானது) அந்த உறுதிப் பத்திரத்தில் தானும்,தன் வழித் தோன்றல்களும் பத்மநாபசாமிக்கு ‘‘தாசர்களாக ( சிறீபத்ம நாப சாமியின் அடிமைகளாக) இருந்து, நாட்டிற்கு சேவை செய்வதாக” உறுதியளித்தார். இதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு அரசரும்,”பத்ம நாபதாசா’ என்ற பட்டப் பெயருடன் அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது . இந்த ஒப்பந்தத்தின்மூலம் அரசர்கள் பத்மநாபசாமியின் பிரதிநிதியாகவே ஆண்டனர் என்ற வழமையும் ஏற்பட்டது. இதன்மூலம் திருவாங்கூர் மன்னர்கள், கடவுளோடு ‘‘தெய்வீகஉறவு’’. கொண்டவர்கள் என்று நம்ப வைக்கப் பட்டனர் அனிசம திருநாள் மன்னர் மார்த்தாண்ட வர்மர் இதை ஒரு சடங்காகச் செய்யாமல், சட்டப் பூர்வமான நடவடிக்கையாகவே செய்தார்.
“திருப்படிதானம்’’
ஆட்சிப் பொறுப்பை சிறீபத்மநாப சாமியிடம் ஒப்படைக்கும் நிகழ்வு‘‘திருப்படி தானம்” என்றழைக்கப்பட்டது. திருப்படிதானமன்று மன்னர் மார்த்தாண்ட வர்மா, மற்றும் அரசவையைச் சேர்ந்தவர் கள் வாகனங்களில் செல்லாமல் கால்நடையாக பத்மநாப சாமி கோயிலுக்குச் சென்றனர். மார்த்தாண்டவர்மா தன் அதிகாரத்தின் அைடயாளமாக உடைவாளையும், கேடயத்தையும் பத்மநாபசாமியின் கோயிலின் படிக்கட்டில் வைத்து, வணங்கினார் (நாட்டை கடவுளுக்கு ஒப்படைப்பதாகப் பொருள்) இந்த சடங்குதான் திருப்படிதானம்” என்றழைக்கப்பட்டது. மன்னர் கடவுளுக்கு ‘‘குலதெய்வம்’’, ‘‘காவல் தெய்வம்’’, “நாட்டின் அதிபதி” என்ற மூன்று பதவிகளையும் கொடுத்ததாக அரசனின் படைவீரர்கள் பத்மநாப சாமிக்கு தொண்டு செய்ய அனுப்பப் பட்டனர். சாமி ஊர்வலம் அரசனுக்குரிய ஊர்வலம் போல் நடத்தப் பட்டது. அண்டை நாடுகளின் கப்பம் கோயிலுக்கே அளிக்கும் வழக்கம் உண்டானது. தனக்கு எதிராக நம்பூதிரி, நாயர் கூட்டணி செய்யும் சதியை உடைக்கவே மன்னர் மார்த்தாண்ட வர்மா இப்படி செய்தாராம். கடவுளே மன்னராகி விட்டால், யார் அவருக்கு எதிராகச் சதி செய்ய முடியும்? ஆனாலும் இந்தக் கூட்டணியின் சதியால் மன்னர் மார்த்தாண்ட வர்மா கொலை செய்யப்பட்டார் என்பது வாலாறு (இந்து தமிழ் திசை” படிதானம் திருவாங்கூர் சமஸ்தானம்)
– “திருப்படிதானம்” ஓர் அரசியல் தந்திரம் by R.ஜெயக்குமார்)
‘‘ஆந்திராவில் இருந்து குடியேறிய நம்பூதிரிகள், “கூடாரத்தில் புகுந்த ஒட்டகம் கதையாக’’, புராண, இதிகாசங்களைக் காட்டி சமூகத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டனர். அரசர்களின் பக்தியைப் பயன்படுத்தி, கோயில்களில் அர்ச்சகர்கள் ஆயினர். கோயில்களே ஒரு காலக் கட்டத்தில் திருவாங்கூரின் அதிகார மய்யங்களாகவே மாறின. அங்கி ருந்த நம்பூதிரி பார்ப்பனர்கள் அரசனையே வழிநடத்தும் நிைலமைக்குச் சென்று விட்டனர். திருவாங்கூர் அரசர்களும் நம்பூதிரிகளை மீறி செயல்பட முடிமாத பொம்மைகளாக மாறிப் போனார்கள். திருவாங்கூர் நாட்டின் கோயில்களின் ஆட்சி, அதிகாரம் முழுவதும் அவர்கள் கைப்பற்றிக் கொண்டனர். கோயில் சொத்துக்கள் கணக்கு, வழக்குகள் – அவர்கள் சொத்தாக மாறி விட்டன. நம்பூதிரி பார்ப்பனர்கள் பெரிய நிலக்கிழார்களாக மாறினர். ஏற்கனவே செல்வாக்கோடு இருந்தவர்களுக்கு, செல்வமும் சேர்ந்தது. அதிகாரமும், அரசனின் ஆதரவும் இருந்ததால் பல ஜாதிய சட்டங்கள் அவர்கள் இயற்றினர். அவற்றை அரசர்களும் மவுனமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.அதனால் நம்பூதிரிகள் நாளடைவில் அரசனையும் மிஞ்சிய அதிகாரம் சமூகத்தின் மீது செலுத்தினர். ஒரு சிறு கூட்டமாக இருந்த நம்பூதிரி கூட்டம், பெரும்பாலான மக்கள் மீது ஜாதியச் சட்டங்களைத் திணித்து, அடிமைகளாக, ஊமைகளாக (கடவுளின் பேரால்) அவர்களை மாற்றிவிட்டனர். உலகில் எங்குமே நடக்காத கொடுமைகள் பெரும்பாலான கீழ்ஜாதி மக்கள் மீதும், பெண்கள் மீதும் (பார்ப்பனப் பெண்கள் உட்பட) கட்டவிழ்த்து விடப்பட்டன. அந்தக் கொடுமைகளிலிருந்து தப்பிக்க முடியாமல் தவித்த சோகமும், பல உயிர் பலிகளை வாங்கிய கொடுமையான நாடாக திருவாங்கூர் நாடு மாறிப் போனது. (தொடருவேன்…)