சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சி தொடங்கியது.
நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் இயக்குனர் பிரேம் குமார் கூறியதாவது:-
நான் படிக்கிற வயதில் ஒரு மும்மொழி ஒன்றை சொல்லுவார்கள். ‘கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே.’
பிச்சை எடுத்தாலும் படிக்க வேண்டும் என்று சொல்வார்கள். தமிழ்நாடு பகுத்தறிவுக்கு மட்டுமல்ல, கல்வி அறிவுக்கும் பெயர் போனது. கல்வியை தன்மானத்திற்கு இணையாக கருத வேண்டும்.
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படிங்க.. படிங்க.. மத்ததை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். என்று நம் முதல்வர் சொல்வதை கேட்டு கல்வியின் முக்கியத்துவம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் கிடைக்கக்கூடிய சலுகைகளை பார்த்து ஆச்சரியமாக உள்ளது. நன்றி சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.