திண்டிவனம், செப். 26- திண்டிவனம் கழக மாவட்டம் மயிலம் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தழுதாளி மற்றும் கன்னியம் கிராமங்களில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது
கன்னியம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு பெரியார் பிறந்த நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப் பட்டது இந்த கிராமத்திற்கு பெரியார் அவர்கள் மூன்று முறை வருகை தந்திருக்கிறார்
அங்கு வாழ்ந்த மிகச்சிறந்த பெரியாரின் தொண்டர் ஜெயராமன் ஒரு முரட்டு சுயமரியாதை வீரராவார்
அவருடைய இல்லத்தில் அய்யா தங்கிய வரலாறு கன்னியம் கிராமத்திற்கு உண்டு
அப்படிப்பட்ட கிராமத்தில் இன்று அதே கிராமத்தை சேர்ந்த பழனி , இராமதாஸ் ஆகியோரின் பங்களிப்போடு புதிய கிளை கழகம் தொடங்கப்பட்டு அய்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டமும் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்கும், நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது நிகழ்வில் கிராம பொது மக்களும் பெண்களும் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தது மகிழ்ச்சியான நிகழ்வாகும்
அதேபோல் தழுதாளி யிலும் அய்யாவின் பிறந்த நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது
நிகழ்வில் மாவட்ட தலைவர் இரா அன்பழகன், மாவட்ட செயளாலர் இளம்பரிதி, மாவட்ட காப்பாளர் பரந்தாமன், மாநில இளைஞரணி துணை செயளாலர் தம்பி பிரபாகரன் மாவட்ட துணைத்தலைவர் ச அன்புக்கரசன், நகர தலைவர் பாபு மாவட்ட இளைஞரணி செயளாலர் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் விஜயலட்சுமி தாஸ் ஒலக்கூர் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சாந்தி பெருமாள், பாஞ்சாலம் ஊராட்சி மன்ற தலைவி, பாஞ்சாலம் விநாயக மூர்த்தி
மயிலம் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் கஸ்தூரி அன்புக்கரசன் நிவேதா இளம்பரிதி, செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.