ஜெயங்கொண்டத்தில் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கல்வித் துறையில் சிறப்பான பணி ஆற்றி வரும் ஆசிரியர் ஆர். செல்வகுமார் (முதுகலை ஆசிரியர்) அவர்களுக்கு, பெரியார் மணியம்மை தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர் நிலைபல்கலைக்கழகம்) “சிறந்த ஆசிரியர் விருது” வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் விழா நிறுவன வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கல்வி மேம்பாட்டில் புதுமையான கற்பித்தல் முறைகள், மாணவர்களின் திறன் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு மற்றும் சமூக அக்கறையுடன் செயல்பட்டதற்காக இவருக்கு இவ்விருதை முதலாம் ஆண்டு மாணவர்கள் தேர்வு செய்து உள்ளதாக நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.விழாவில் (நிகர்நிலை) துணைவேந்தர், பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டு ஆர். செல்வகுமாரைப் பாராட்டினர். பள்ளி முதல்வர் இரா.கீதா பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தார்.