ஜெயங்கொண்டம், செப். 25- பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக சிறப்பு தேர்வு பயம் மற்றும் மனநல ஆலோசனை வகுப்பு நடத்தப்பட்டது.
லில்லி புஷ்பம், டாக்டர் கிருஷ்ணகுமார், முதல்வர் இரா. கீதா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயனுள்ள அறிவுரைகளை வழங்கினர். ஆலோசனை வகுப்பில், மாணவர்கள் எதிர்காலத்தில் எவ்வாறு தங்கள் கல்வித் திட்டங்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும், தேர்வுத் தயாரிப்பில் மன உறுதி மற்றும் கவனக்குறைவுகளை எவ்வாறு தவிர்க்க வேண்டும் என்பதையும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது
போதைப்பொருளின் தீமைகள்: உடல் மற்றும் மன நலனுக்கு ஏற்படும் பாதிப்புகள், கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கையில் சவால்களை எதிர் கொள்ளவது பற்றிய விரிவாக விளக்கப்பட்டன.
மாணவர்கள் தவறான பழக்கவழக்கங்களில் சிக்காமல் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.மாணவர்கள் கேள்விகளைக் கேட்டனர். பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்
கேற்று, மாணவர்களுக்கு ஊக்கமளித்தனர்.