மதுரையில் பெரியார் பிறந்த நாள் விழா

2 Min Read

மதுரை செப்.25 தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாளான செப்.17 காலை 10 மணிக்கு தல்லாகுளம் பெரியார் சிலைக்கு மதுரை மாநகர் மாவட்ட  கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் அ.முருகானந்தம் தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தே.எடிசன்ராசா, வே.செல்வம் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் முனைவர் வா.நேரு ஆகியோர் முன்னிலையில் திரளான தோழர்கள் புடைசூழ வாழ்த்து முழக்கங்கள் இட்டு ஊர்வலமாக சிலைக்கு முன் கூடினர். பெரியார் வாழ்க என்ற முழக்கத்துடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது . மாவட்ட காப்பாளர் சே.முனியசாமி.மாவட்ட செயலாளர் இரா.லீ.சுரேசு.மாவட்ட துணைத் தலைவர் நா.முருகேசன். இரா.திருப்பதி, மாவட்ட துணைச் செயலாளர் க.சிவா. சந்திரசேகர்,  மாநில மாணவர் கழகத் துணை தலைவர் தேவராஜ் பாண்டியன், பேராசி ரியர் பெரியார் பித்தன், கழக பேச்சாளர் அ.வேங்கைமாறன். ஆட்டோ செல்வம். தனசேகரன் எபிநேசர். பெத்தானியாபுரம் பாண்டி.நாகராசன். முரளி.மாவட்ட துணை தலைவர் பவுன்ராஜ் மற்ற பேக்கரி கண்ணன்.வேல்துரை, மகளிரணி அஜிதா. அல்லிராணி. சீர்த்தி.ஜானகி நவநீதன். மாரிமுத்து.  சடகோபன். தியாகராசன்.சீனிவாசன், மின்வாரிய தொழிலாளர்முன்னேற்றசங்க இணைச் செயலாளர் ராஜேஷ் கன்னா, இபி முத்தையா, வில்லாபுரம் அ.ஆறு முகம். ஆரப்பாளையம் நாகராஜ், லயன் அ.மணிராஜ். முன்னாள் மாவட்ட செயலாளர் க.அழகர்.மணிகண்டன். பக.மாவட்டத்தலைவர் ச.பால்ராஜ் மாவட்ட செயலாளர் பழனிவேல்ராசன்.பொதுக்குழு உறுப்பினர் சோ.சுப்பையா போட்டோ இராதா.கோரா செல்லூர் தனசேகரன், ராஜசேகர், எபிநேசர், அ.அழகுப்பாண்டி, பா.சடகோபன் பிச்சைப்பாண்டி மற்றும் திரளான தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த னர் .

முதல் நிகழ்ச்சியாக கிரைம்பிராஞ்சு தமிழக எண்ணெய் பலகாரம் அருகில் பெரியார் சிலைக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் எ.செல்வப்பெரியார் தலைமையில் தே.எடிசன்ராஜா மாலை அணிவித்தார். சிவா, மாரிமுத்து, சீனி வாசன், பாண்டி,நாகராஜ் ஆகிய தோழர்கள் உடன் இருந்தனர்.

நிகழ்ச்சிக்குப்பின் புதூர் பேருந்து நிலையத்தில்பாக்கியம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியிலும் பீபீகுளம் ரவுண்டானா, மாவட்ட செயலாளர் இரா.லீ சுரேஷ் ஏற்பாட்டில் பீபீ குளத்திலும், இரா.திருப்பதி, தனசேகரன் ஏற்பாட்டில் மீனாட்சி புரத்திலும், செல்லூர் 50 அடிரோட்டில் ந.இராஜேந்திரன், கோகு.கணேசன் ஏற்பாட்டிலும், செல்லூர் பகுதியில் சேகர் ஏற்பாட்டில், அருள்தாஸ் புரத்தில் ராஜா ஏற்பாட்டிலும், சொக்கலிங்கநகரில் முத்துச்செல்வி இராமூர்த்தி ஏற்பாட்டிலும், முனிச் சாலையில் மேனாள் மாவட்ட செய லாளர் க.அழகர் ஏற்பாட்டிலும், அனுப்பானடியில் பேக்கரிகண்ணன் பொ.பவுன்ராஜ், வேல்துரை ஆகியோர் ஏற்பாட்டிலும், மாகாளிபட்டியில் ஆட்டோ செல்வம் தலைமையிலும் ஏற்பாடு செய்யப்பட்டது

அனைத்து இடங்களிலும் மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில செயலாளர் சுப.முருகானந்தம் ,சீ.தேவராஜ்பாண்டியன்ஆகியோர் உரை யாற்றினர் . வாழ்த்து முழக்கங்களுடன் மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *