பெற்றோரிட்ட பெயருக்கு பின்னால்
வாலாயிருந்த ஜாதிப் பெயரைத் துண்டித்தது
“சூத்திரன் “என்ற இழிச்சொல்லை பதிவேட்டில் நீக்கி, அனைவருக்கும் கல்வியை தந்தது.
விதவை மறுமணம், குழந்தை திருமணம் முறை,
தேவதாசி முறை ஒழிப்பு,பெண் கல்வி,
பெண்களுக்கு ஓட்டுரிமை, சொத்துரிமை
அப்பப்பா அதனால்தானே தந்தையென்ற பேர் பெற்றார்
ஜாதி, மத ஆணவக் கொலைக்கு
கும்மி ஆட்டங்களும், ரத யாத்திரைகளும்
வண்ணக் கயிறு கட்டி சத்தியம் வாங்குவதை
தோலுரித்துக் காட்டத் துணிந்த இயக்கம்
காலை உணவு, மகளிர் உரிமைத்தொகை
புதுமைப் பெண்ணாய் விடியல் பயணம்
முதுமையில் ஓய்வூதியம் தமிழ் புதல்வனுக்கு
நல்ல வளர்ச்சி நன்றி சொல்ல வாருங்கள் !
தந்தை பெரியாரின் கொள்கைகள்
திட்டங்களுக்கு சமூக நீதிக் காவலராய் ,
இனமான தகைசால் தலைவராம்
தமிழர் தலைவர் கி.வீரமணி அழைக்கிறார்
வாருங்கள்! வாருங்கள்! என
உரிமையுடன் அழைக்கின்றோம்!
– நா.சுப்புலட்சுமி,
திருப்பத்தூர்.