வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் அவசர அவசரமாக நடைபெறும் சாலைப் பணிகள்

சென்னை, செப்.25- தமிழ் நாட்டில் வடகிழக்கு பருவமழைக் கான முன்னெச்சரிக்கை நடவ டிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள் ளன. எனவே சாலைப்பணிகளை அடுத்த மாதம் (அக்டோ பர்) 15-ஆம் தேதிக்குள் முடிக்க வேண் டும் என்று தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது.

எதிரொலிக்கும்

வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 2-ஆவது வாரம் தொடங்கும் என வானிலை ஆய்வு மய்யம் கணித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை தீவிரமாக தொடங்கி உள்ளது. மழை எவ்வளவு பெய்தாலும், மக்களுக்கும் அவர்களின் உடைமைகளுக்கும் எந்த பாதிப்பும் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.

மழையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது வரு கிற சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும். எனவே முதல மைச்சர் மு.க.ஸ்டாலினின் நேரடி கண்காணிப்பின் கீழ் முன் னெச்சரிக்கை பணிகள் தொடங்கி உள்ளன. தமிழ்நாடு அரசின் நக ராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றுக்கு மழைக்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

பழைய கட்டடங்கள்

அதன்படி முன்னெச்சரிக்கை பணிகள் விவரம் வரு மாறு:-

* மழை நீர் தேங்காமல் வழிந்தோடுவதற்கு வசதியாக மழை நீர் வாய்க்கால்கள், கால்வாய்கள் ஆகியவற்றை தூர்வாரி வைக்க வேண்டும்.

* நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் தேங்கி இருக்கும் பிளாஸ்டிக், மணல் ஆகியவை அகற்றப்பட வேண்டும்.

* சாலைகளில் தோண்டப்பட்ட அனைத்து பள்ளங்களும் மூடப்பட வேண்டும். பாதாள சாக்கடை மற்றும் குடிநீருக்காக தோண்டப்பட்ட சாலைகளை புதிதாக அமைக்க வேண்டும். அனைத்து சாலை பணிகளையும் அக்டோபர் மாதம் 15-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

*மழைக்கு சாயும் நிலையில் உள்ள மரங்களை கண்டறிந்து அதனை அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும்

* மழைக்கு விழும் நிலையில் உள்ள பழைய கட்டிடங்களை முன்பே கண்டறிந்து சம்பந்தப்பட்ட உரிமையாளர் மூலம் அகற்ற வேண்டும்.

குடிநீர் வினியோகம்

பொதுமக்கள் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க  முக்கிய சாலைகள், ஆம்புலன்ஸ் செல்லும் சாலைகள் சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும்.

* மழைக்காலத்தில் குடிநீர் வினியோகம் தடைபடக் கூடாது. சீரான வினியோகம் இருக்க வேண்டும். குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.

* நீர் தேங்கும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை முடிக்க வேண்டும். அதே வேளையில் இந்த பகுதிகள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

வார்டு வாரியாக தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்க வேண்டும். அதற்கான இடத்தை தேர்வு செய்து வைத்து கொள்ள வேண்டும்.

* கொசு உற்பத்தியை கட்டுப் படுத்த வேண்டும். மக்களுக்கு அத னால் வரும் நோய்களை முற்றிலும் தடுக்க வேண்டும்

* நகர்ப்புற சுகாதார நிலை யங்களில் தேவையான மருந்துகளை கையிருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

*மின்சாரத்துறை, பொதுப் பணித் துறை உள்ளிட்ட துறைகளு டன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

அதுபோல சென்னை மாநகராட் சிக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப் பட்டு முன்னெச் சரிக்கை பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *