தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து உரையாடினார். ெபரியார் புத்தக நிலையத்தில் நூல்களை பார்வையிட்டார். (சென்னை, 24.09.2025)
பாவலர் அறிவுமதி எழுதிய, “உலக அமைதிக்கான நூல் புறநானூறு ” எனும் நூலை அவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். கவிஞர் இசாக், வழக்குரைஞர் துரை. அருண் உடன் இருந்தனர். (சென்னை, 24.09.2025)
தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளர் கருவிழிக்காடு ரெ.சுப்பிரமணியன் – மகேசுவரி ஆகியோரின் மகள் சு.இதழினி BA.,MS., அரசு ஆயூர்வேதா மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் ரூ.3000/- நன்கொடை வழங்கினார். (சென்னை, 24.09.2025)
நாச்சிமுத்து – ருக்மணி ஆகியோரது மகளும், கழகத் தலைமை செயற்குழு உறுப்பினர் ஈரோடு த.சண்முகத்தின் வளர்ப்பு மகளுமான கண்ணம்மா, சென்னை பார் கவுன்சிலில் பதிவு செய்தமையின் மகிழ்வை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம், இயக்க நன்கொடையாக, ரூ.20,000 வழங்கினார். வாழ்த்துகள் (சென்னை, 25.09.2025)