மும்பை, செப். 24- மும்பை திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 147ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலை 10 மணிக்கு தாராவி பெரியார் சதுக்கத்தில் பெரியார் படம் அலங்கரித்து மாலை அணி விக்கப்பட்டு தோழர்களால் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது, பிறகு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர் !கழக வெளியீட்டு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.
மாலை 7.30 மணிக்கு தாராவி கலைஞர் மாளிகையில் தந்தை பெரியாருடைய பிறந்த நாள் குடும்ப விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது விழாவுக்கு மும்பை திராவிடர் கழக தலை வர் பெ .கணேசன் தலைமை வகித்தார். விழாவுக்கு மும்பை மூத்த திராவிட முன்னேற்ற கழக தலைவர் என்.வி .சண்முகராஜன், மும்பை மாநகர திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் அன்பழகன் பொற்கோ, மும்பை மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் சாலமன் ராஜா, பெரியவர் ஆ.பாலசுப்பிரமணியம் சோ. ஆசைத்தம்பி ,தமிழ் ஓட்டுநர்கள் சங்க தலைவர் இரா. இரவி ரஜினி, பெரியார் பாடல்களை பாடிய பாடகர் ஆனந்தராஜ், பூ.சு .அழகர் ராஜா, தோழர் அருள்மணி, சி.குப்பன்,தாராவி திராவிடர் கழக கிளைச் செயலாளர் மு. கணேசன், பா. கணேசன், கே.எம்.அமீர் அலி, அ.குணசேகர், மும்பை திமுக பணிமனை பொறுப்பாளர் க. ராஜன் , தி.மு.க. தோழர்கள் இரா.காந்திமுத்து, காளிமுத்து ஆகியோர் முன்னிலை வைத்தனர்
பெரியார் பிஞ்சு க.அறிவு மலர் கடவுள் மறுப்பு கூறி அனைவரையும் வரவேற்றார்! தந்தை பெரியார் பிறந்த நாள் கேக் பெரியார் பிஞ்சுகளால் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டன கழக குடும்பங்களை சார்ந்த பெரியார் பிஞ்சுகள் தந்தை பெரியாரைப் பற்றி பேசினார்கள்
பெ.மகிழினி, பெ.சுபாஷினி அ.இனியா வி.ஜோஸ்லின், வி.பெனினா, அ. இலமோ, க.கயல் க.செந்தமிழரசி, அ. இளவேனில், க.அறிவுமதி, க.விக்ரம், க.சஞ்சய், பெ.கோமதி க.வளர்மதி இ. வனிதா உள்ளிட்டோர் பேசியதைத் தொடர்ந்து மும்பை திராவிட முன் னேற்றக் கழகத்தைச் சார்ந்த சுகுணா அன்பழகன் சிறப்புரையாற்றினார்
உணவு முறைகளில் ஆரிய பார்ப்பனர்கள் கற்பித்துள்ள புனிதம் – தீட்டு என்கின்ற மாயமாலத்தை உடைத்தெறிய விழாவுக்கு வந்திருந்த அனை வருக்கும் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி ,மற்றும் கோழி இறைச்சி உணவுகள் வழங்கப்பட்டன!
மும்பை திராவிடர் கழகத் துணைத் தலைவர் இ.அந் தோணி, கழக பொருளாளர் பெரியார் பாலா, கழகத்தின் துணைச் செயலாளர் அ.கண்ணன் உள்ளிட்டோர் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் மும்பை திராவிடர் கழக செயலாளர் ஜே. வில்சன் நன்றி கூறினார்.
தலைமை நிலையத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட தந்தை பெரியார் பிறந்த நாள் வாழ்த்து சுவரொட்டிகள் மும்பை மாநகரில் பல இடங்களில் ஒட்டப்பட்டன.