தமிழ்நாடு அரசு வேலை: பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்..!

2 Min Read

நிறுவனம்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM)
வகை : தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் : பல்வேறு
பணியிடம் : விருதுநகர், தமிழ்நாடு
கடைசி தேதி : 29.09.2025
பதவி: சமுதாய வள பயிற்றுநர் (Community Resource Person)
ஊதியம்: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி
காலியிடங்கள்: பல்வேறு
கல்வித்தகுதி: பயிற்சி நடத்துவதற்குத் தேவையான உடற்தகுதி மற்றும் திறன் இருந்தால் மட்டும் போதுமானது, சுய உதவிக் குழுவில் குறைந்தபட்சம் அய்ந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். மாவட்ட, வட்டார மற்றும் ஊராட்சி அளவிலான பயிற்சிகளில் குறைந்தது 5 முதல் 10 பயிற்சிகளிலாவது கலந்து கொண்டிருக்க வேண்டும், கைப்பேசி செயலிகளை பயன்படுத்த தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.

அரசியலில் முக்கிய பொறுப்பில் இல்லாதவராகவும், தனியார் நிறுவனங்களில் முழு நேரமாகவோ (அ) பகுதி நேரமாகவோ பணிபுரிபராகவோ இருக்கக் கூடாது.விண்ணப்பதாரர் தொடர்புடைய குழுவி லிருந்து சமுதாய வள பயிற்றுநராக பரிந்துரைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றி அத்தீர்மானம் நகலை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.பயிற்சி நடத்துவதற்கு தேவையான உடற்தகுதி மற்றும் திறன் இருந்தால் மட்டும் போதுமானது. சுயஉதவிக் குழுவில் குறைந்தப்பட்சம் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
முக்கிய தேதி: விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.09.2025 கடைசி தேதிக்கு பின்னர் வரும் விண்ணப் பங்கள் ஏற்கப்பட மாட்டாது.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்கள் https://virudhunagar.nic.in/ என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பில் 17.09.2025 முதல் 25.09.2025 வரை மாலை 05.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். இணைப்பு மாதிரி படிவம் தொடர்புக்கு மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அலுவலக தொலைபேசி எண். 04146 2237362. உதவி திட்ட அலுவவர் (CB), தொலைபேசி எண். 9442992115 தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *