எச்-1பி விசாவுக்கான கட்டண உயர்வு டிரம்ப்பின் கெடுபிடி அறிவிப்பால் அவசர அவசரமாக விமானத்தில் இருந்து இறங்கிய இந்தியர்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டு வீடுகளுக்கு திரும்பினர்

வாசிங்டன், செப். 23- விசா கட்டண உயர்வு அறிவிப்பு வெளியானபோது, இந்தியாவுக்கு புறப்பட்ட மென்பொறியாளர்கள் பலரும் விமானத்தில் இருந்து கீழே இறங்கி சென்ற காட்சிப் பதிவுகள் தற்போது வேகமாகப் பரவி வருகின்றன.

விசா கட்டண உயர்வு

அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் எச்-1பி விசாவுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக (சுமார் ரூ.88 லட்சம்) டிரம்ப் நிர்வாகம் அதிகரித்து உள்ளது.

புதிதாக இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கும் மற்ற நாட்டினர் இந்த தொகையை செலுத்த வேண்டும். அமெரிக்காவின் கெடுபிடி மற்ற நாட்டு தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எச்-1பி விசாக்களை அதிகமாக இந்தியர்கள் பெற்று வருவதால் டிரம்பின் இந்த அறிவிப்பு இந்தியர்களுக்கு பேரிடியாக அமைந்து இருக்கிறது.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ் கோவில் இருந்து கடந்த 19ஆம் தேதி இந்தியாவுக்கு எமிரேட்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் இந்திய மென்பொறியாளர்கள் அதிக அளவில் இருந்தனர். அப்போது எச்1பி விசாவுக்கான கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதையறிந்த இந்திய மென்பொறியாளர்கள் பலரும் விமானத்தில் இருந்து உடனடியாக கீழே இறங்கினர். பயணத்தை ரத்து செய்துவிட்டு வீடுகளுக்கு திரும்பினர்.

காட்சிப் பதிவு

விமானத்தில் இருந்த பயணி ஒருவர் இதுதொடர்பான காட்சி களை தனது கைப்பேசியில் படம் பிடித்து சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.

‘‘மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்ப முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இந்தியப் பயணிகள் அவசரமாக வெளியேறிவிட்டனர்’’ என்று அதில் அவர் தெரிவித்துள்ளார். மற்றொரு காட்சிப்பதிவில், பயணிகள் நடைபாதையில் குழப்பத்துடன் நிற்பதையும், சிலர் விசா கட்டணம் தொடர்பான தகவலை அறிய தங்களது கைப்பேசிகளை பதற்றத்துடன் பயன்படுத்தியதையும் பார்க்க முடிந்தது.

இந்தியப் பயணிகளின் இக் கட்டான சூழலை புரிந்துகொண்ட விமான கேப்டன் கூறும்போது, ‘‘அன்பான பயணிகளுக்கு! முன்னெப்போதும் இல்லாத புதிய சூழலை எதிர்கொண்டுள்ளோம். பல பயணிகள் எங்களுடன் பய ணிக்க விரும்பவில்லை என்பதை அறிகிறோம். இந்தியாவுக்கு விமானம் புறப்படுவதற்கு முன்பு யார் வேண்டுமானாலும் இறங்கிச் செல்லலாம்’’ என்று அறிவித்தார். இந்த குழப்பத்தால் எமிரேட்ஸ் விமானம் சுமார் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *