வெட்டிக்காடு செப்.22- தந்தை பெரியார் அவர்களின் 147ஆவது பிறந்தநாள் விழா வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சரியாக 10:30 மணியளவில் கொண்டாடப்பட்டது.
தந்தை பெரியாரின் பிறந்த நாளை ஒட்டி தந்தை பெரியாரின் படத்திற்கு பள்ளி முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பள்ளியில் பணிபுரியும் ஆசிரிய பெருமக்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மாணவர்கள் அனைவரும் தந்தை பெரியார் அவர்களின் படத்திற்கு முன்பு நின்று பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் பாடி வாழ்த்தி மகிழ்ந்தனர். இறுதியாக மாணவர்களுக்கும் பணிபுரியும் அனைவருக் கும் பள்ளி முதல்வர் கடலை மிட்டாய் வழங்கி மகிழ்ந்தார்.