திருச்சி, செப்.22– 06.09.2025 முதல் 15.09.2025 வரை 10 நாட்கள் துவரங்குறிச்சியில் தேசிய மாணவர் படை (NCC) சார்பில் ஆண்டு பயிற்சி முகாம் (ATC camp) நடைபெற்றது. இதில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 21 பேர் கலந்து கொண்டனர். இம்முகாமில் நடைபெற்ற ஏறிபந்து கோ-கோ, துப்பாக்கி சுடுதல், சிலம்பம் போன்ற பல்வேறு போட்டிகளில் இப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்று ஒட்டு மொத்த (Overall Championship) வென்று இப்பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.